சென்னை டிபிஐ வளாகத்தில் இனி போராட்டங்கள், ஆர்ப்பாட்டங்கள் என எதற்கும் அனுமதி கிடையாது என பள்ளி கல்வித்துறை தெரிவித்துள்ளது. பள்ளிக்கல்வித்துறை மற்றும் தொடக்க கல்வித்துறையை சேர்ந்த ஆசிரியர் சங்கத்தினர் பல்வேறு கோரிக்கைகள் தொடர்பாக சென்னை டிபிஐ வளாகத்தில் போராட்டம் நடத்தி வருகின்றனர். அண்மையில் பல்வேறு ஆசிரியர் சங்கத்தினர் தொடர்ச்சியாக ஒரு வாரத்திற்கு மேலாக உண்ணாவிரத போராட்டம் நடத்தியது மிகப்பெரிய பரபரப்பை ஏற்படுத்தியது.
கிட்டத்தட்ட 5 ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்கள் போராட்டத்தை முன்னெடுத்தனர். இந்த நிலையில், சென்னை டிபிஐ வளாகத்தில் இனி போராட்டங்கள், ஆர்ப்பாட்டங்கள் என எதற்கும் அனுமதி கிடையாது என்று பள்ளி கல்வித்துறை திட்டவட்டமாக தெரிவித்துள்ளது. ராஜரத்தினம் மைதானம், வள்ளுவர் கோட்டம் போன்ற அனுமதிக்கப்பட்ட இடங்களில் மட்டுமே போராட்டங்கள் நடத்தலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
More Stories
இடஒதுக்கீட்டு எதிராக மு.க.ஸ்டாலின்..!
அன்புமணி தாக்கு…!
கேரள மாநிலம் வயநாடு நிலச்சரிவு
மாவட்ட வளர்ச்சிப் பணிகளை துரிதப்படுத்த 11 மாவட்டங்களுக்கு கண்காணிப்பு அலுவலர்கள் நியமனம்