November 10, 2024

சென்னை உள்பட 22 மாவட்டங்களில் வெப்பத்தின் தாக்கம் அதிகரிக்கும் – வானிலை மையம் அறிவிப்பு

தென் கிழக்கு அரபிக்கடல் பகுதியில் நிலவும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக ஒருசில மாவட்டங்களில் லேசான மழை பெய்யக்கூடும் என வானிலை மையம் தெரிவித்துள்ளது.

சென்னை உள்பட 22 மாவட்டங்களில் வெப்பத்தின் தாக்கம் அதிகரிக்கும் – வானிலை மையம் அறிவிப்பு

மகாராஷ்டிரா முதல் உள் தமிழகம் வரை 1.5 கி.மீ. உயரம் வரை நிலவும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி மற்றும் கேரளா அதனையொட்டி தென் கிழக்கு அரபிக்கடல் பகுதியில் நிலவும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக ஒருசில மாவட்டங்களில் லேசான மழை பெய்யக்கூடும்.

மேற்கு தொடர்ச்சி மலை ஒட்டிய மாவட்டங்கள், வடக்கு உள் தமிழக மற்றும் தென் தமிழக மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி, மின்னலுடன் லேசான மழை பெய்யும்.

18 முதல் 21-ந் தேதி வரை மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டிய மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். மற்ற மாவட்டங்கள், புதுவை, காரைக்கால் பகுதிகளில் வறண்ட வானிலை நிலவும்.

வானிலை ஆய்வு மையம்

சென்னையில் வானம் மேக மூட்டத்துடன் காணப்படும். வருகிற 20, 21-ந் தேதி வரை சென்னை, திருவள்ளூர், காஞ்சீபுரம், செங்கல்பட்டு, ராணிப்பேட்டை, வேலூர், திருப்பத்தூர், தர்மபுரி, சேலம், நாமக்கல், விழுப்புரம், திருவண்ணாமலை, கள்ளக்குறிச்சி, கடலூர், பெரம்பலூர், அரியலூர் நாகப்பட்டினம் மயிலாடுதுறை, தஞ்சாவூர், திருவாரூர், திருச்சி, கரூர் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் அதிகபட்ச வெப்பநிலை 2 முதல் 3 டிகிரி செல்சியஸ் வரை அதிகரிக்கக் கூடும் என்று வானிலை ஆய்வு மைய இயக்குனர் புவியரசன் தெரிவித்துள்ளார்.

கடந்த 24 மணி நேரத்தில் விருதுநகர், ஸ்ரீவில்லிபுத்தூர் தலா 6 செ.மீ., ஒகேனக்கல், பென்னாகரம் தலா 5 செ.மீ. மழை பெய்துள்ளது.