
ஆளுநர் ரவியின் கோப்புகள் உள்துறை அமைச்சர் அமிர்ஷாவுக்கு அனுப்பப்பட்டு வருகிறது. திமுக அரசுக்கு எதிரான குறிப்புகள் அடங்கிய சீக்ரெட் கோப்புகளை டெல்லிக்கு அனுப்பி வைத்து கொண்டிருக்கிறார் தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி. குறிப்பாக உள்துறை அமைச்சர் பிரதமர் அலுவலகம் இரண்டிற்கும் இந்த கோப்புகள் அனுப்பு வைக்கப்படுவது மாநில ஆளுநரின் கடமையாகும். மாநில அரசின் நிர்வாகம் ஆளுநரின் மேற்பார்வையில் நடைபெறுவதால் சட்டம் ஒழுங்கு பிரச்சனை மற்றும் நிர்வாக சீர்கேடு, ஊழல் தொடர்பான புகார்கள் இதுபோன்ற குறிப்புகளை மாதம் தோறும் கவர்னர் மாளிகையில் இருந்து அனுப்பி வைக்கப்படுவது வழக்கம். அதன் அடிப்படையில் ஆளுநர் அவர்கள் திமுக அமைச்சர்கள் குறித்தும் முக்கிய தொழில் அதிபர்கள் திமுகவுன் நெருக்கமாக இருந்து வருபவர்கள், வெளிநாட்டு துபாய் பயணம் மற்றும் சி.பி.ஐ வருமான வரித்துறை போன்ற புலனாய்வு அமைப்புகளும் திமுக அரசுக்கு எதிராக பல்வேறு ஆதரங்களையும் திரட்டி புகாராக மத்திய அரசுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை அவர்களும் பி.ஜி.ஆர்.எனர்ஜி நிறுவனத்திற்கு ஒதுக்கீடு செய்யப்பட்டத்தில் 4500 கோடி ரூபாய் அளவிற்கு ஊழல் நடந்துள்ளதாக ஆதரங்களுடன் ஆளுநரிடம் புகார் அளித்துள்ளார் அண்ணாமலை. ஆக திமுக மீது மத்திய அரசின் பார்வை ஆழமாக பதிந்து இருப்பதாக டெல்லி வட்டார தகவல் கூறுகின்றது. விரைவில் நடைபெறவிருக்கும் குடியரசு தலைவர் தேர்தலுக்குப் பிறகு தமிழ்நாட்டில் மத்திய அரசு தனது நெற்றிக்கண் பார்வையை திறக்கும் அபாயம் உள்ளது. இந்த அபாயத்தில் பதவி இழக்க போகிறவர்கள் மின்துறை மற்றும் மதுவிலக்குதுறை அமைச்சர் செந்தில்பாலாஜி பதவி இழப்பார் என்கிறது டெல்லி வட்டாரம்.
– டெல்லிகுருஜி