September 18, 2024

சூரியனின் மேற்பரப்பை புகைப்படம் எடுத்த சீனா

சூரியனின் மேற்பரப்பு எப்படி இருக்கும் என்ற வீடியோ காட்சிகளை சீனா வெளியிட்டு உள்ளது. சீனாவின் அறிவியல் அகாடமி கடந்த அக்டோபர் மாதம் ஜிகுவான் செயற்கைக்கோள் மையத்தில் இருந்து குவாக்பு-1 என்ற செயற்கைக்கோளை விண்ணில் ஏவியது. சூரியனை ஆய்வு செய்யும் வகையில் அனுப்பப்பட்ட இந்த செயற்கைக்கோள் எடுத்த புகைப்படங்களை கொண்டு சீனாவின் சூரிய ஆய்வகம் சூரியனின் மேற்பரப்பில் ஏற்படும் நிகழ்வுகளை ஹார்ட் எக்ஸ்ரே இமேஜர் மூலம் தயாரித்து வெளியிட்டு உள்ளது.