சின்ன சின்ன ஆசை சிறகடிக்க ஆசை; முதல்வர் பதவி மீது ஆசை தமிழ்நாட்டின் மக்களை ஒன்றிணைக்க வேண்டும் என்ற ஆசை; திராவிட கட்சிகளுக்கு மாற்றாக கொள்கை அளவில் தங்கள் கருத்தை ஏற்றுக் கொள்கிற அரசியல் இயக்கங்களை அணி திரட்ட வேண்டும் என்ற ஆசை, மாற்றம் முன்னேற்றம் கொண்டுவர வேண்டும் என்ற ஆசை இப்படி பல கோணங்களில் பல்வேறு விதமான திட்டங்களை தோல் மீது சுமந்து கொண்டு தமிழக அரசியலில் ஒரு புதிய மாற்றத்தை உருவாக்க வேண்டும் என்ற ஆசையுடன் வலம் வந்து கொண்டிருக்கும் பாட்டாளி மக்கள் கட்சி இளைஞர் அணி செயலாளர் டாக்டர் அன்புமணி ராமதாஸ் வரும் சட்டமன்ற தேர்தலில் தனது ஆசை கனவுகளை நினைவுகளாக, நிஜங்களாக மாற்ற வேண்டும் என்று “மந்திரம்” என்ற வார்த்தையை பயன்படுத்தி தமிழக இளைஞர்களை கவருகின்ற வகையில் பேசி வருகிறார். கடந்த கால தோல்விகளை வெற்றியாக மாற்றுவதற்கு எத்தகைய மந்திரம் பயன்படுத்தப் போகிறார் என்பதை தமிழக அரசியல்வாதிகளும் அரசியல் பார்வையாளர்களும் கூர்ந்து கவனிக்கிறார்கள்.
அதிமுக, திமுக என்ற இரு அரசியல் ஆளுமைகளும் தமிழகத்தில் ஆதிக்கம் செலுத்தி வந்த நேரத்தில் அந்த இரு தலைவர்களும் தற்பொழுது இல்லாத நிலையில் பெரும்பான்மை சமுதாயத்தின் ஆதரவு தனக்கு இருக்கும் என்ற நம்பிக்கையில் திமுக அதிமுகவுக்கு எதிரான அரசியல் அணிகளை ஒருங்கிணைத்து மாற்று அணியாக அதுவே முதன்மை அணியாக மாற்றுகின்ற முயற்சியில் அன்புமணி ராமதாஸ் ஈடுபட்டு வருவதாக அரசியல் வட்டாரத்தில் செய்திகள் உலா வருகின்றது. பொறுத்திருந்து பார்ப்போம் அன்புமணியின் ஆசைகள் அரசியல் களத்தில் எத்தகைய மாற்றத்தை உருவாக்கும் என்பதை.
– சாமி
More Stories
வடகிழக்கு பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கை
சட்டமன்ற உறுப்பினர் அரவிந்த்ரமேஷ் பங்கேற்பு
அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி தொடர்ந்த வழக்கில் அதிமுக கொடி, பெயரை பயன்படுத்த ஓபிஎஸ்க்கு தடை: உயர்நீதிமன்றம் உத்தரவு:
மாணவர்களை கைவிடக் கூடாது என்பதற்காக நீட் பயிற்சி