தமிழக அரசியலில் புதிய அரசியல் காற்று நடிகர் விஜய் மக்கள் இயக்கம் மூலம் வீசுமா என்ற எதிர்பார்ப்பு விஜய் ரசிகர்கள் மன்றத்தில் ஏற்பட்டுள்ளது. நடிகர் விஜய் அரசியல் நடவடிக்கைகளில் ஈடுபடும் பொழுது தனது தந்தை எஸ்.வி.சந்திரசேகர் உத்தரவை மீறி செயல்படுவாரா? அல்லது தானே ஒரு முடிவு எடுத்து அரசியலில் இயங்குவாரா என்ற குழப்பம் ரசிகர்கள் இயக்கம் மத்தியில் பரவி வருகிறது.
சமீபத்தில் மக்கள் இயக்கத்தில் இருந்து சிலரை நீக்கிய பொழுது எஸ்.ஏ.சந்திரசேகருக்கும், நடிகர் விஜய்க்கும் கருத்து வேறுபாடு இருந்ததாக கூறப்படுகிறது. பிறகு இது சரிசெய்யப்பட்டு புதியவர்கள் நியமனமும் நடந்து முடிந்து விட்டது. தமிழக சட்டமன்ற தேர்தல் களம் சூடுபிடிக்கும் நிலையில் தாங்களும் அரசியலில் ஈடுபட வேண்டும் என்று ரசிகர்கள் நடிகர் விஜய்யிடம் கோரிக்கை வைத்து உற்சாகத்தில் இருக்கிறார்கள். ரஜினிகாந்த் அவர்களும் நடிகர் விஜய் அவர்களும், நடிகர் கமலஹாசன் அவர்களும் ஒருங்கிணைந்து தமிழக அரசியலில் ஒரு புதிய அவதாரமாக தோன்றி திராவிட கட்சிகளுக்கு மாற்றாக வருவார்களா என்ற எதிர்பார்ப்பும், திரைப்பட நடிகர்களை ரசிகர்கள் மத்தியில் ஒரு புதுவிதமான யோசனை தோன்றி உலா வந்து கொண்டிருக்கிறது.
சினிமாதுறை சார்ந்தவர்களிடமிருந்து தமிழக அரசியல் விடுபட்டு ஒ.பன்னீர்செல்வம், எடப்பாடி பழனிசாமி போன்றவர்களும் முதலமைச்சர் ஆகலாம் என்று நிலை உருவாகி உள்ள தற்காலிக சூழலில் மீண்டும் சினிமாகாரர்கள் கையில் தமிழக அரசியல் களம் செல்லுமா என்ற கேள்வியும் எழுகிறது.
– பெத
More Stories
லியோ படத்தின் சிறப்புக் காட்சிக்கு வழங்கப்பட்டுள்ள அனுமதியைத் தவறாகப் பயப்படுத்துவதைத் தடுக்க நடவடிக்கை
அயலான் டீசர் ரிலீஸ் தேதி கன்ஃபார்ம்… ஏலியன்ஸுடன் சிவகார்த்திகேயன் கொடுத்த அப்டேட்
ஜெயிலர் வெற்றி.. காரை பரிசாக வழங்கிய கலாநிதி மாறன்