சிங்கப்பூர்: இலங்கையில் மக்களின் புரட்சி போராட்டம் காரணமாக அதிபராக இருந்த கோத்தபய ராஜபக்சே சிங்கப்பூருக்கு தப்பி சென்றார். அவர் சிங்கப்பூரில் தங்கி இருப்பதற்கான விசா காலம் நாளையுடன் முடிவடைகிறது. கோத்தபய ராஜபக்சேக்கு மேலும் 2 வாரம் விசா நீட்டிப்பு வழங்கும்படி சிங்கப்பூரிடம் இலங்கை அரசு வேண்டுகோள் விடுத்தது. இந்த நிலையில் கோத்தபய ராஜபக்சே சிங்கப்பூரில் இருந்து தாய்லாந்தில் தஞ்சமடைய திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகி இருக்கிறது.