February 19, 2025

சர்வதேச திரைப்பட விருதை வென்ற ‘ஆதார்’

வெண்ணிலா கிரியேஷன்ஸ் தயாரிப்பில் இயக்குனர் ராம்நாத் பழனி குமார் இயக்கத்தில் வெளியான திரைப்படம் ‘ஆதார்’. இந்த படத்தில் கருணாஸ், அருண் பாண்டியன், இனியா, ரித்விகா ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருந்தனர். எளிய மனிதர்களின் யதார்த்த வாழ்வியலை அழுத்தமாக பதிவு செய்திருந்த இந்தத் திரைப்படம் வெளியாகி விமர்சன ரீதியாக நல்ல வரவேற்பை பெற்றது. இந்நிலையில் சென்னையில் நடைபெற்ற 20-வது சர்வதேச திரைப்பட விழாவில், தமிழ் படங்களுக்கான போட்டி பிரிவில் ‘ஆதார்’ உள்ளிட்ட 12 திரைப்படங்கள் திரையிடத் தேர்வு பெற்றன. இதில் சிறந்த தமிழ் பட தயாரிப்பிற்கான விருது ‘ஆதார்’திரைப்படத்தின் தயாரிப்பாளர் பி. சசிகுமாருக்கு வழங்கப்பட்டது. இந்த விருதினால் படக்குழுவினர் உற்சாகமடைந்துள்ளனர்.