November 3, 2024

சசிகலாவை அதிமுகவில் சேர்க்கமாட்டோம்! எடப்பாடி பழனிசாமி உறுதி!!

தமிழ்நாட்டில் நகராட்சி பேரூராட்சி தேர்தல்கள் நடைபெற்றால் திமுக கூட்டணி கட்சிகளுக்கு மேயர் தேர்தலில் போட்டியிடும் வாய்ப்பை வழங்குவது குறித்து தீவிரமாக ஆலோசித்து வருகிறது. அனைத்து நகராட்சி தேர்தல்களிலும் (மேயர் பதவி) அனைத்திலும் திமுகவே போட்டியிட வேண்டும் என்று விரும்புகிறது. மத்திய அரசு நிதி தொகுப்பில் இருந்து மாநில அரசுக்கு வரவேண்டிய அதிக நிதி மாநகராட்சி பேரூராட்சி நிர்வாகத்திற்கு அதிக நிதி நேரடியாக வருவதால் அந்த நிதியை மக்களிடம் கொண்டு சேர்க்கும் பொறுப்பை ஆளும்கட்சியான திமுக நடைமுறைப்படுத்தினால் கட்சிக்கும் ஆட்சிக்கும் நற்பெயர் ஏற்படும் அவபெயர் ஏற்படாமல் தடுக்கலாம் என்பதை மனதில் கொண்டு இத்தகைய முடிவு குறித்து முதல்வர் மு.க.ஸ்டாலின் யோசித்து வருவதாக கூறப்படுகிறது.

குறிப்பாக காங்கிரஸ் கம்யூனிஸ்ட் கட்சிகள் தவிர மற்ற கட்சிகள் திமுக கூட்டணியில் இருந்தாலும் திமுகவின் சின்னமான உதயசூரியன் சின்னத்தில் சட்டமன்ற தொகுதியில் போட்டியிட்டதால் இந்த கட்சிகள் நகராட்சி தலைவர் பதவி மற்றும் மேயர் பதவி போன்றோரை வேண்டும் என்று அதிக ஆர்வம் செலுத்தமாட்டார்கள். இதுவும் திமுகவிற்கு ஒரு சாதகமான சூழ்நிலையை ஏற்படுத்தி தரும். பெயரளவிற்கு காங்கிரஸ் கட்சி விரும்பினால் ஓரிரு இடங்களை திமுக (மேயர் பதவி) விட்டு தருவதற்கு வாய்ப்புள்ளது. எனவே உள்ளாட்சி தேர்தல் பணிகளை அனைத்து அரசியல் கட்சிகளும் தொடங்கிவிட்ட நிலையில் தேர்தல் தேதியை அறிவித்தால் நகராட்சி மாநகராட்சி பேரூராட்சி தேர்தல் சூடுப்பிடிக்கும்.

அதிமுகவின் மாவட்ட செயலாளர்கள் கூட்டம் மிகவும் காரசாரமாக நடைபெற்று முடிந்திருக்கிறது. குறிப்பாக போயஸ்கார்டன் இல்லம் நினைவில்லமாக்க போட்ட சட்டத்தை உயர்நீதிமன்றம் ரத்து செய்தது. மற்றும் வருகின்ற மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சி தேர்தல்கள் பற்றி விவாதிக்கப்பட்டதோடு உட்கட்சியில் நிலவி வரும் பூசல் குறித்தும் சசிகலாவை மீண்டும் சேர்ப்பது குறித்தும் ஆலோசிக்கப்பட்டதாக தகவல்கள் கூறுகின்றன. இன்னும் ஒருசிலர் சசிகலா குறித்து எந்த விவாதமும் வரவில்லை என்று சசிகலாவை கட்சியில் சேர்ப்பது குறித்து திட்டவட்டமாக எடப்பாடி பழனிசாமி, ஒ.பன்னீர்செல்வம் அந்த விஷயத்தில் உறுதியாக இருப்பதும் மீண்டும் சசிகலாவை கட்சிக்குள் சேர்த்தால் சாதி, மதம், மொழி இவைகளுக்கு அப்பாற்பட்ட ஒரு இயக்கமாக அதிமுக சாதி ரீதியாக பிளவுபடும் அபாயம் இருப்பதாக ஏற்படும் வாய்ப்பு உள்ளதாகவும் அதற்கு இடம் தரகூடாது என்றும் இதற்காகவே கட்சியில் சேர்க்கக் கூடாது என்பதிலும் அனைவரும் உறுதியாக இருக்கவேண்டும் என்று பலரும் விரும்புகிறார்களாம்.

தற்பொழுது அதிமுகவில் நிலவி வரும் குழப்பமான சூழலிலும் எடப்பாடி பழனிசாமி அவர்களின் ஆதரவு நிலையே அதிகளவு இருப்பதாகவும் ஒ.பன்னீர்செல்வம் ஆதரவு நிலை மிக குறைந்த அளவே இருப்பதாகவும் கூறப்படுகிறது.

– டெல்லிகுருஜி