January 26, 2025

கொரோனா கட்டுப்பாடுகளுடன் பிளஸ் 2 செய்முறை தேர்வு- ஆய்வகங்களில் பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரம்

பள்ளி வளாகங்கள் கிருமி நாசினி தெளித்து சுத்தம் செய்து மாணவர்களுக்கு உடல் வெப்ப பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது.

கொரோனா 2-வது அலை வேகமாக பரவி வருவதால் பிளஸ்-2 பொதுத்தேர்வை குறிப்பிட்டப்படி நடத்துவதா? அல்லது தள்ளி வைப்பதா? என்பது குறித்து அதிகாரிகள் இன்று பிற்பகலில் ஆலோசனை நடத்துகிறார்கள்.

இதற்கிடையில் தமிழகம் முழுவதும் பிளஸ்-2 மாணவர்களுக்கான செய்முறை தேர்வு இன்று தொடங்கியது. மொத்தம் 28 வகையான பாடங்களுக்கு இந்த செய்முறை தேர்வு நடைபெறுகிறது.

செய்முறை தேர்வில் ஈடுபட்டுள்ள மாணவிகள்

பாட வாரியாக பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது. ஆய்வகங்களில் மாணவர்களுக்கு தனித்தனி இட வசதி செய்து கொடுக்கப்பட்டுள்ளது. மாணவர்கள் கிருமி நாசினி கொண்டு கைகளை சுத்தம் செய்த பிறகே ஆய்வகங்களுக்கு அனுமதிக்கப்பட்டனர்.

அதே போல் செய்முறை தேர்வுகள் முடிந்ததும் ஆய்வக பொருட்களை சுத்தம் செய்யவும் உத்தரவிடப்பட்டுள்ளது.

பள்ளி வளாகங்களையும் கிருமி நாசினி தெளித்து சுத்தம் செய்து மாணவர்களுக்கு உடல் வெப்ப பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது.

செய்முறை தேர்வுகள் அனைத்தையும் வருகிற 23-ந்தேதிக்குள் நடத்தி முடித்து 24-ந்தேதிக்குள் மதிப்பெண்களை அந்தந்த மாவட்ட முதன்மை கல்வி அலுவலகத்தில் ஒப்படைக்க வேண்டும் என்று அரசு தேர்வுகள் இயக்ககம் உத்தரவிட்டுள்ளது.