உலகை அச்சுறுத்திக் கொண்டிருக்கும் கொரனா நோய் தொற்று என்பது கத்தியின்றி ரத்தமின்றி யுத்தம் ஒன்று வருகிறது என்று சொன்ன வார்த்தைகள் தற்போது நினைவு-க்கு வருவது என்ற பொன்மொழி தான் நினைவுக்கு வருகிறது. கொரனா வைரஸ் என்பது உலகம் வெப்பம் மையம் ஆகிறது என்பதால் தான் உருவாகிறது என்பது தான் அதன் பிறப்பிடம் சீனாவில் இருந்து பரவியது என்றும் இன்று சுமார் 140-க்கும் மேற்பட்ட நாடுகளில் கொரனா வைரஸ் பரவி மக்களை அச்சுறுத்தி கொண்டிருக்கிறது. இந்த நோய் அறுபது வயதிற்க்கு மேற்பட்ட வயதானவர்களையும், பிஞ்சு குழந்தைகளையும் இருதய அறுவை சிகிச்சை செய்வதர்களுக்கும், சர்க்கரைவியாதி உள்ளவர்களுக்கும், சுலபமாக பரவக்கூடிய தோற்றுநோய் என்று தகவல்கள் கூறுகின்றது.
இந்த நோயின் தாக்கத்திலிருந்து தப்பித்துக் கொள்வதற்கு பொதுவாக மக்கள் கூடும் இடங்களை தவிர்ப்பது வியாபார ஸ்தலங்களை மக்கள் கூடாமல் இருப்பது நட்சத்திர விடுதிகள், மதுபான கூடங்கள் போன்றவற்றை மூடி வைப்பது உள்பட பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுப்பது அவசியம் என்பது தெரியவருகிறது. குறிப்பாக ஒவ்வொரு மனிதர்களும் தனித்து இயங்குவது நலம் பயக்கும் என்கிறார்கள். பொதுமக்கள் தேவையற்ற இடங்களுக்கு செல்வதையும், வெளியூர் பயணங்களையும் தவிர்ப்பது அவசியம் என்று அரசாங்கம் அறிவுறுத்துகிறது. இந்திய பிரதமர் நரேந்திர மோடி அவர்கள் நாட்டு மக்களுக்கு கூறிய உரையின் போது பல்வேறு விதமான அச்சுறுத்தல் கரோனா நோயினால் உருவாக கூடும் என்ற தனது அச்சத்தை வெளிப்படுத்தியதுடன் கரோனா வைரஸில் இருந்து தப்பிக்க வேண்டுமானால் உங்களுடைய சில மணி நேரங்களை சில வாரங்கள் தியாகம் செய்து தான் ஆகவேண்டும். இதற்காக நீங்கள் சுசு.03.சு0சு0 அன்று ஒருநாள் சுயமாகவே கட்டுப்பாடுடன் இல்லங்களில் இருந்து கரோனா வைரஸிற்கு சவால் விடவேண்டும் என்றும் கூறியுள்ளார். அநே நேரத்தில் பாராளுமன்றமும், சட்டமன்றமும் நடைபெற்று கொண்டிருக்கும் இந்த தருணத்தில் ஒவ்வொரு உறுப்பினர்களும் தங்கள் தொகுதிகளுக்கு சென்று மக்களோடு நின்று கரோனா வைரஸில் இருந்து மக்களை பாதுகாக்கும் பணியில் தங்களை ஈடுபடுத்தி கொள்ளுங்கள் என்று ஏனோ பிரதமர் கூற மறந்துவிட்டார் போல் தெரிகிறது.
மக்களுக்கு பாதுகாப்பு அளிக்க வேண்டியது அரசாங்கத்தின் முழு கடமை. அதே நேரம் பொதுமக்களும் அரசுக்கு ஒத்துழைப்பு தருவது மிக மிக அவசியம் என்ற போதிலும் நோய் தடுப்புக்கு தேவையான உபகரணங்கள், மருந்து கடைகளில் கிடைப்பதில்லை. இந்த குறைகளை போர்க்கால அடிப்படையில் அரசாங்கம் பூர்த்தி செய்யவேண்டும். இதுபோன்ற ஒரு நோய் இதுவரை நாடு பார்த்திருக்கிற வில்லை. ஆனால் இதனை கட்டுப்படுத்துகின்ற மருத்துவம் இதுவரை கண்டுப்பிடிக்கவில்லை என்பது பிரதமர் அவர்கள் தன் உரையில் குறிப்பிடாமல் இருந்திருக்கலாம். மருந்து இல்லை என்பதை பிரதமரே சொல்லிவிட்டார் என்ற அச்சம் பொதுமக்கள் மத்தியில் பயத்தையே தோற்றிவிக்கும். ஆகையால் இந்த நோயிலிருந்து தங்களை பாதுகாத்து கொள்ளவேண்டிய கடமையும், பொறுப்புணர்வு அவரவர்களுக்கே உள்ளது என்று பிரதமர் சூசகமாக சொல்லிவிட்டார்.
மனிதனுக்கு இயற்கை விடும் ஒரு இறுதி எச்சரிக்கையாகவே இந்த நோய் புரிதலை ஏற்படுத்துகிறது. இந்த நிலை தொடரும் ஆனால் உலக பொருளாதாரத்திற்கு ஒரு பெரும் சவாலாக உருவெடுத்து நிற்கும். பல்வேறு உற்பத்திகளுக்கான மூலப்பொருட்கள் தட்டுப்பாடுகள் அதிகரிக்கும். இதனால் வேலை வாய்ப்புகளும் பரிபோகும். பொருள் விற்பனையும் குறையும். எல்லா வகையிலும் ஒரு முன்னணி உற்பத்தியாளராக விளங்கும் சீனா இந்த வகையில் தன்னை சூதாகரித்து கொண்டு கொரனா வைரஸை தங்கள் நாட்டையும், நாட்டு மக்களையும் விரைந்து பாதுகாத்து கொள்ளும் முயற்சியில் ஈடுபட்டு அதில் வெற்றியும் அடைந்துள்ளது.மனிதனால் உருவாக்கப்பட்ட அனைத்து தொழில்நுட்பங்களையும் அவை தந்த பாதுகாப்பு அம்சங்களையும் புறந்தள்ளி விட்டு உலகளாவிய ஒட்டுமொத்த பீதியை ஏற்படுத்திவிட்ட இந்த வைரஸ் நோய்களின் தாக்கம் கொரனாவால் ஏற்பட்ட தாக்கம் மிக கொடியது என கருதப்படுகிறது. இனிமேலாவது இயற்கை வளங்களை கொள்ளையடிப்பதும் ஆறுகளில் மணலை சுரண்டுவதையும் மரங்களை வெட்டி கடத்துவதையும், மனித இனத்திற்கு ஒவ்வாத காரியங்களையும் ஈடுபட்டு பணம் சம்பாதிக்கும் நாசகார தொழிலையும் செய்யாமல் இருப்பது அவசியம் என கருதி சுற்றுச்சூழலை பாதுகாத்து இயற்கை வளங்களையும் பாதுகாத்து மனித இனத்திற்கு எதிரான சவால்களிலிருந்து மக்களை பாதுகாக்கும் நடவடிக்கைகளில் எல்லோரும் ஈடுபட வேண்டும் என்ற எச்சரிக்கையாகவும் கரோனா நமக்கு கற்றுத்தரும் பாடம். இன்று முதல் இயற்கையை பாதுகாப்போம். செயற்கை மாசுப்படுவதை தடுப்போம். – ஆர்.பி
More Stories
பட்டியல் இனத்தவர் உள்ஒதுக்கீடு: உச்ச நீதிமன்ற தீர்ப்பு
தமிழக தொழில் முதலீட்டுக்கு ரூ.1,258 கோடி கிடைத்தது: முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்றிரவு சென்னை திரும்புகிறார்
சென்னையில் போக்குவரத்து தொழிற்சங்கத்துடன் முத்தரப்பு பேச்சுவார்த்தை