November 2, 2024

‘கே.ஜி.எப். 2’ படத்தின் ரிலீஸ் தேதி மாற்றம்

பிரஷாந்த் நீல் இயக்கத்தில் யாஷ் நடிப்பில் உருவாகி உள்ள ‘கே.ஜி.எப். 2’ படத்தின் ரிலீஸ் தேதி மாற்றப்பட்டு உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.


பிரஷாந்த் நீல் இயக்கத்தில் யாஷ், ஸ்ரீநிதி ஷெட்டி நடிப்பில் கடந்த 2018 ஆம் ஆண்டு வெளியான படம் ‘கே.ஜி.எப்’. மாபெரும் வரவேற்பை பெற்ற இப்படம், வசூலிலும் பல்வேறு சாதனைகளை படைத்தது. தற்போது இந்த படத்தின் 2ம் பாகம் உருவாகி வருகிறது. இதில் யாஷுடன் ஸ்ரீநிதி ஷெட்டி, சஞ்சய் தத், பிரகாஷ் ராஜ், ரவீனா டண்டன் உள்ளிட்டோர் நடித்துள்ளார்கள்.

இப்படம் வருகிற ஜூலை 16-ந் தேதி வெளியிடப்படும் என ஏற்கனவே அறிவித்திருந்தனர். கொரோனா ஊரடங்கு காரணமாக திரையரங்குகள் மூடப்பட்டு உள்ளதால், இப்படத்தின் ரிலீஸ் தேதி மாற்றப்பட உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. அதன்படி கே.ஜி.எப். 2 படத்தை வருகிற செப்டம்பர் மாதம் 9-ந் தேதி வெளியிட திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது. விரைவில் இதுகுறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.