December 6, 2024

குழப்பத்தில் ரஜினி

குழியில் அதிமுக!

நடிகர் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்கள் திடீரென தனது கருத்தை வெளியிட்டு ஆளுங்கட்சி செயல்பாடுகளை ஆதரித்தும் “கறுப்பர் கூட்டம்“ என்ற யூடிப் சேனல் பதிவிற்கு எதிராகவும் குரலேழுப்பியது அகில இந்திய அளவில் ஒரு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

“கந்தனுக்கு ஆரோகரா” என்ற பதவின் மூலம் உலகளவில் மிகப் பெரிய ட்ரெண்ட் ஆகி மீண்டும் அரசியலில் ரஜினிகாந்த் குதிக்கப்போகிறார் என்ற எதிர்பார்ப்பு ரசிகர்களுக்கு உற்சாகத்தையும் பல அரசியல் இயக்கங்களுக்கு அதிர்ச்சியும் ஏற்படுத்தியுள்ளது. ரஜினி ஒருவார்த்தை கூறினால் தொலைக்காட்சிகளும், ஊடகங்களும் ஒருவாரம் விவாதம் நடத்துகிறது. அந்தளவிற்கு ரஜினியின் அறிக்கை அமைந்திருப்பதால் அவர் அரசியல் கட்சி தொடங்கினாலும் தொடங்கவில்லையென்றாலும் அரசியலில் ஒரு முக்கியத்துவம் தமிழ்நாட்டில் ரஜினிக்கு உள்ளது என்கின்ற அடையாளத்தை வெளிப்படுத்துகிறது.

இந்த அடையாளம் சு0சுபு&ம் ஆண்டு நடைபெறவிருக்கும் தமிழக சட்டமன்ற தேர்தலில் எத்தகைய தாக்கத்தை ஏற்படுத்தப்போகிறது என்பதை பொறுத்திருந்து தான் பார்க்கவேண்டும்.