November 3, 2024

குலாம்நபி ஆசாத்துக்கு ஆதரவாக காங்கிரஸிலிருந்து மேலும் 64 பேர் ராஜினாமா

காங்கிரஸ் மூத்த தலைவர்களில் ஒருவரான குலாம் நபி ஆசாத், அக்கட்சியில் இருந்து விலகினார். கட்சியின் கட்டமைப்பை ராகுல் சீர்குலைத்து விட்டதாக பரபரப்பு குற்றச்சாட்டை சுமத்தினார். அவரை தொடர்ந்து அவரது சொந்த மாநிலமான ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தை சேர்ந்த 8 காங்கிரஸ் தலைவர்கள் அக்கட்சியைவிட்டு விலகி விட்டனர். எப்போது வேண்டுமானாலும் ஜம்மு காஷ்மீரில் சட்டசபை தேர்தல் அறிவிக்கப்படலாம் என்பதால், விரைவில் அங்கு புதிய கட்சி தொடங்க உள்ளதாக குலாம் நபி ஆசாத் கூறி உள்ளார். தொடர்ந்து, குலாம் நபி ஆசாத்துக்கு ஆதரவாக கட்சியில் இருந்து மேலும் 3 தலைவர்கள் விலகினர். இந்நிலையில், குலாம்நபி ஆசாத்துக்கு ஆதரவாக ஜம்மு- காஷ்மீரில் காங்கிரஸ் கட்சியிலிருந்து மேலும் 64 பேர் ராஜினாமா செய்துள்ளனர். இதில், முன்னாள் துணை முதல்வர் தாரா சந்த் உள்பட ஜம்மு- காஷ்மீர் மாநில நிர்வாகிகள் காங்கிரஸ் கட்சியிலிருந்து விலகியுள்ளனர்.