April 26, 2024

கிாிமினல் வழக்குகளில் எம்.பி.க்கள்

[responsivevoice_button voice=”Tamil Male”]குற்ற பின்னணி உள்ளவர்கள் அரசியலில் இறங்கி எம்.பி., எம்.எல்.ஏ.என பெரும் பதவிகளை வகிப்பது சர்வ சாதாரணமாகிவிட்டது. இதனை தடுக்கும் வகையில் உச்சநீதிமன்றம் கடந்த 2018 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் ஓர் ஆணை பிறப்பித்தது. வேட்பாளர்கள் , தங்கள் மீதான குற்ற வழக்கு விவரங்களை தேர்தல் ஆணையத்திடம் சமர்பிக்க வேண்டும் என்றும், அந்த விவரங்களை ஊடகங்களில் விளம்பரமாக வெளியிடவேண்டும் என்பதே அந்த உத்தரவு. இந்த ஆணை எதிர்பார்த்த பலனை அளிக்காததால், மாற்றுத்தீர்வு காண வேண்டும் என்று பாரதிய ஜனதா கட்சியை சேர்ந்த வழக்கறிஞர் அஸ்வினி உபாத்யாயா உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். இதற்கு பதில் அளிக்குமாறு தேர்தல் ஆணையத்துக்கு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது.அதன்படி, தேர்தல் ஆணையம் சார்பில் வழக்கறிஞர் விகாஸ் சிங், உச்சநீதிமன்றத்தில் பிரமாண பத்திரம் தாக்கல் செய்தார். தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள், தங்கள் குற்ற வழக்கு விவரங்களை விளம்பரமாக வெளியிட வேண்டும் என்ற உத்தரவு,அரசியல் குற்றமயமாவதை தடுக்க உதவவில்லை.எனவே வேட்பாளர்களுக்கு உத்தரவிடுவதற்கு பதிலாக, குற்ற பின்னணி கொண்டவர்களை வேட்பாளர்களாக நிறுத்த வேண்டாம் என்று அரசியல் கட்சிகளுக்கு உத்தரவிட வேண்டும்’’ என்று விகாஸ் சிங் உச்சநீதிமன்றத்தில் தெரிவித்திருந்தார். வழக்கை விசாரித்த உச்சநீதிமன்றம், ‘நீங்கள் சொல்வது சரிதான்’ என்று தெரிவித்தது. மேலும், அரசியல் குற்றமயமாவதை தடுப்பதற்கான வழி முறையுடன், நீதிமன்றத்தை அணுக வேண்டும் என்று தேர்தல் ஆணையத்தை உச்சநீமன்றம் வலியுறுத்தியது. அரசியல் குற்றமயமாவதை தடுக்க மனுதாரர் அஸ்வினும், தேர்தல் ஆணையமும் யோசனைகளை உருவாக்குமாறும் கேட்டுக்கொண்டது. முன்னதாக வழக்கறிஞர் விகாஸ்சிங் கூறும்போது, இப்போதுள்ள எம்.பி.களில் 46% பேர் குற்ற வழக்குகளில் தொடர்புடையவர்கள் என்ற தகவலை தெரிவித்தார். அதாவது 233 எம்.பி.க்கள் குற்ற பின்னணி கொண்டவர்களாக உள்ளனர். கொலை,கொலை முயற்சி, பாலியல் பலாத்காரம் உள்ளிட்டவை இந்த குற்ற வழக்குகளில் அடங்கும்.[/responsivevoice]