November 2, 2024

காரியத் தடைகளை தவிடுபொடியாக்கும் பிள்ளையார் விரத வழிபாடு

விநாயகர் வழிபாடு விக்னங்களையும் தடைகளை தவிடுபொடியாக்கும். விநாயகரை வீட்டில் வழிபாடு செய்தால், மிகப்பெரிய தடைகளும், வெற்றி படிக்கல்லாய் மாறி சுபம் உண்டாகும்.


வாழ்வில் துக்கத்தையும், துயரத்தையும் மட்டுமே பார்த்தேன் என்று விரக்தியுடன் இருப்பவர்கள் கூட, விநாயகரை வீட்டில் வைத்து தொடர்ந்து வழிபாடு செய்தால் வாழ்வில் வசந்தத்தை ஏற்படுத்துவார் செல்வ கணபதி.

வெற்றிகளைக் குவிக்கும் விநாயகரின் துணையுடன் வாழ்வை வெற்றிக் கொள்ளலாம்.

வெள்ளெருக்கு விநாயகரை வீட்டில் வைத்து பூஜை செய்வது விசேஷம். எருக்கஞ்செடி விநாயகருக்கு உரிய செடி, எருக்கன் மாலை விநாயகருக்கு உகந்தது. வெள்ளருக்கு செடியினால் உருவாக்கப்பட்ட விநாயகருக்கு, துளசி தீர்த்தம், சந்தனம், பன்னீர் என அபிஷேகம் செய்த பிறகு பூஜை அறையில் வைத்து வழிபடத் தொடங்கலாம்.

விநாயகரை அப்படியே வைத்து வழிபாடு செய்வதைவிட, பித்தளைத் தாம்பாளத்தில் பச்சரிசி அல்லது நெல்லை விரவிவிட்டு, அதன்மேல் விநாயகரை வைத்து வழிபடலாம். தினசரி விநாயகருக்கு பிரசாதத்தை நிவேதனம் செய்து தீபம் ஏற்றி வேண்டுதல்களை சொல்லி பூஜித்தால் போதும்.

வெள்ளெருக்கு விநாயகரை நோக்கியவாறு அகல் தீபத்தின் சுடர் எரியுமாறு விளக்கேற்றவேண்டும். இந்த எளிய வழிமுறையை பின்பற்றி விரதம் இருந்து விநாயகரை துதித்தால், தும்பிக்கை முகத்தோன், வினைகளை அறுத்து, வாழ்வில் வளம் சேர்ப்பார்.