முன்னாள் துணைமுதல்வர் ஒ.பன்னீர்செல்வம் அவரது மகனும் தேனி நாடாளுமன்ற உறுப்பினருமான ரவீந்திரநாத் தங்கள் வேட்பு- மனுவில் உண்மை நிலையை மறைத்து விண்ணப்பித்ததினால் புகாரை கண்டறிந்து விசாரணை நடத்தப்பட வேண்டும் என்று வழக்கு தொடுக்கப்பட்டுள்ளது. இது பெரியக்குளம் நீதிமன்றத்தில் விசாரணைக்கு எடுத்தக்கொள்ளப்பட்டு ரவீந்திரநாத் மீது வழக்கு தொடுப்பதற்கும் அனுமதித்துள்ளது. இந்த வழக்கு சட்டமன்ற நாடாளுமன்ற உறுப்பினர்களை வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றத்தில் விசாரணைக்கு வர இருக்கிறது. அப்பொழுது குற்றம் நீருபிக்கப்பட்டால் ரவீந்திரநாத் பதவி பறிக்கப்படலாம். இதற்கு தேர்தல் ஆணையம் எத்தகைய முடிவை எடுக்கப்போகிறது என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.
– டெல்லிகுருஜி
More Stories
தமிழ் பேசு தம்பி…!
சட்டப்பேரவையில் எடப்பாடி பழனிசாமிக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சவால்
இளைஞர்களை அணி திரட்டுகிறார்
பண்ருட்டி வேல்முருகன்