September 18, 2024

எடப்பாடி பழனிசாமியின் பிடியில் இருந்து அதிமுகவை மீட்க போராடும் சசிகலா!

அதிமுகவில் அதிகார போட்டி அதிகளவில் பலரை பதவி மோகத்தில் இருந்த பொழுது சசிகலாவுக்கு எதிராக பல வழிகளில் திசை திரும்பியது இந்த நிலையில் தினகரன் புதிய கட்சி தொடங்கியது சசிகலாவிற்கு தர்ம சங்கடத்தை ஏற்படுத்தியிருந்தாலும் தினகரன் கட்சி தொடங்க சசிகலாவின் ஆதரவி பரிபூரணமாக இருந்தது என்பது நிஜம் (குரங்கு குட்டியை விட்டு ஆழம் பார்த்த கதையாக). ஆனால் தினகரனால் எதிர்பார்த்த அளவிற்கு அதிமுக வாக்குகளை பெற முடியவில்லை. அதே நேரம் சமுதாய வாக்குகளையும் (சாதி) தினகரனால் கணிசமான அளவிற்கு பெறமுடியவில்லை. இந்த நிலையில் தினகரன் மற்றும் சசிகலாவின் முயற்சி தோல்வியை சந்தித்துள்ளது. இந்த தோல்வியில் இருந்து மீண்டும் தன்னை அதிகார மையத்திற்கு அமர்த்த வேண்டும் என்ற ஆசை தினகரனுக்கும் சசிகலாவிற்கும் ஏற்பட்டுள்ளது. இதன் விளைவாக தினகரன் கட்சியிலிருந்து பல முன்னாள் சட்டமன்ற உறுப்பினர்கள், முன்னாள் அமைச்சர்கள் கட்சியை விட்டு வெளியேறி திமுகவிலும், அதிமுகவிலும் இணைந்தார்கள்.

இதை பற்றியெல்லாம் கவலைப்படாத சசிகலா சிறையில் இருந்து வெளியே வந்தவுடன் தனது செல்வாக்கை நிரூபிக்கும் வகையில் ஜெயலலிதா பாணியில் பெங்களூர் சிறையில் இருந்து சென்னை வரும்வரை அமமுக தொண்டர்களை வைத்து மாபெரும் வரவேற்பை கொடுத்தார் தினகரன். அதன் பிறகும் தினகரன் மீது அதிமுகவினர்களுக்கு ஈர்க்கும் சக்தி தெரிந்துக் கொண்ட பலர் தினகரனை விட்டு வெளியேறி திமுகவில் இணைந்து அமைச்சர்களாகவே ஆகிவிட்டார்கள். குறிப்பாக செந்தில் பாலாஜியை கூற முடியும். இருந்தாலும் மனம் தளராத சசிகலா கடந்த சட்டமன்ற தேர்தலில் இருந்து விலகி கொள்வதாக அறிவித்து எதிர்பார்த்தப்படி திமுக ஆட்சி அமைந்தது. ஆனால் அதிமுகவின் படுதோல்வியை சந்திக்கும் என்று நினைத்தார் ஆனால் அது நடைபெறவில்லை. அதே நேரம் அதிமுக தோல்விக்குப் பிறகு கட்சி தலைமை தன்னிடம் தானாக வந்து சேரும் என்று நினைத்தார் சசிகலா அதுவும் நடைபெறவில்லை.

ஒ.பன்னீர்செல்வத்தை நம்பி இனி எந்தப் பயனும் இல்லை என்ற முடிவுக்கு வந்துவிட்டார். எடப்பாடி பழனிசாமியோ அசுர வளர்ச்சி அடைந்துவிட்டதாக என்று நினைத்து வேலுமணி, தங்கமணி மற்றும் சில முன்னாள் அமைச்சர்கள் மாவட்ட செயலாளர்கள் ஒன்றிய செயலாளர்கள், நகர செயலாளர்கள் மற்றும் தன்னுடன் இருந்தால் போதும் என்று முடிவு செய்து தொண்டர்கள் தானாகவே வந்து சேருவார்கள் என்று நினைத்து எதிர்கட்சி தலைவர் பதவியையும் பெற்றுக்கொண்டார். ஆனால் சசிகாவின் திட்டம் குறித்து நன்றாக அறிந்திருந்தும், தெரிந்திருந்தும் எடப்பாடி பழனிசாமி ஒபிஎஸ் ஓரம் கட்டுவதுப்போல் நினைத்துக்கொண்டு பாஜக கட்சியின் வியூகத்தின் வலைக்குள் சிக்கிக் கொண்டார். இந்த நிலையில் சசிகலா தினகரனை பின்னுக்கு தள்ளிவிட்டு அதிமுகவை கைப்பற்றுவதற்காக தொண்டர்கள் தரிசனத்திற்கு ஏற்பாடு செய்து வழக்கம்போல் தன் தீவிர ஆதரவாளர்களுடன் தொலைபேசியில் பேசி அதிமுகவில் ஒரு சலசலப்பை, பரபரப்பை ஏற்படுத்தி உள்ளார்.

எடப்பாடி பழனிசாமியும், ஒ.பன்னீர்செல்வமும் சசிகலாவிற்கு அதிமுகவில் இடம் இல்லை. ஆகவே அவரது ஆதரவாளர்களுக்கும் அதிமுகவில் இடம் இல்லை என்று அதிரடியாக சசிகலாவுடன் தொலைபேசியில் தொடர்பு கொண்ட அனைவரையும் கட்சியில் இருந்து கட்சியின் அடிப்படை உறுப்பினர் இருந்து நீக்கம் செய்துள்ளார். இனியும் பொறுத்துக்கொள்ள முடியாது என்ற நிலையில் சசிகலா அதிரடி திட்டத்தை உருவாக்கி ஆளுங்கட்சி ஆதரவைப் பெற்று (திமுக) அம்மா சமாதிக்கு (ஜெயலலிதா) சென்று உறுதிமொழி எடுத்துக் கொண்டு அம்மாவின் ஆன்மா என்னை ஆசீர்வாதம் செய்கிறது என்று தமிழகம் முழுவதும் தொண்டர்களை நேரில் சந்திக்க புறப்படுகிறார் சசிகலா. இந்த திட்டத்தை தடுத்து நிறுத்தவோ இந்த திட்டத்திற்கு மாற்று திட்டமோ எடப்பாடி பழனிசாமி, ஒ.பன்னீர்செல்வம் இருவரிடம் இருப்பதாக தெரியவில்லை. அதே நேரம் ஊடகங்களும் செய்தித்தாள்களும் சசிகலாவை உயர்த்திப் பிடிக்கின்றன. எப்படியும் அதிமுகவை சசிகலா கைப்பற்றிவிடுவார் என்று ஆருடம் கணித்து விவாதம் நடத்துகிறார்கள். இதைப்பற்றியெல்லாம் சிறிதும் கவலைப்படாமல் மாவட்ட செயலாளர்களை அழைத்து ஆலோசனை நடத்துவதற்கு முயற்சி செய்கிறார். இதில் எத்தனை பேர் கலந்துக் கொள்வார்கள் எத்தனை பேர் பங்கேற்கமாட்டார்கள் என்பது கூட்டம் நடந்து முடிந்தப் பிறகு தான் தெரியவரும்.

ஆனால் சசிகலா நடராஜன் அதிமுகவை கைப்பற்றுகின்ற சுற்றுப்பயணம் விரைவில் தொடங்கும் என்பதையும் அவரது சுற்றுப்பயண வரவேற்பு ஏற்பாடுகளையும் ஆவலோடு எதிர்பார்த்து அதிமுக தொண்டர்களும் கட்சி நிர்வாகிகளுக்காக காத்திருக்கிறார்கள். தினகரன் மகள் திருமணத்திலிருந்து தனது பிரச்சாரத்தை தொடங்கலாம் என்று திட்டமிட்டிருந்த சசிகலா எப்பொழுது தொடங்குவார் என்று அதிமுக தொண்டர்களைப் போல் அக்னிமலர் வாசகர்களும் காத்திருங்கள்! ஏமாறப்போவது எடப்பாடி பழனிசாமியா, சாதிக்கப் போவது சசிகலாவா? என்பதை விரைவில் தெரிந்துக் கொள்ளலாம். ஒருவேளை சசிகலா அவர்கள் எதிர்பார்த்தப்படி திமுக அரசும் முதல்வர் மு.க.ஸ்டாலினும் அதிமுகவின் அரசு மீது கொடுக்கப்பட்ட ஊழல் புகார் பட்டியலை விசாரிக்கும் பொழுது பல முன்னாள் அமைச்சர்கள் வேலுமணி, தங்கமணி, எடப்பாடி பழனிசாமி உள்பட சிறைக்கு செல்வது நிச்சயம். அதன் பிறகு அதிமுக தொண்டர்கள் தன்னை தேடி வருவார்கள் என்றும் அந்த நேரத்தை பயன்படுத்திக் கொண்டு அதிமுகவை கைப்பற்றலாம் என்று கணக்குப்போட்டு காத்திருக்கிறார் சசிகலா.

ஒருவேளை இது நடைபெற்றால் சசிகலாவின் விருப்பம் நிறைவேறுவதற்கு சுலபமான வழி ஏற்படலாம். எடப்பாடி பழனிசாமியும், ஒ.பன்னீர்செல்வமும் ஏமாந்துபோவார்கள் என்று நிச்சயம். இந்த இடத்தில் சசிகலாவின் தந்தீரம் வெற்றிப்பெறலாம் என்று கணக்குப்போடுகிறார் தினகரன். காலமும் நேரமும் இதற்கு தகுந்த பதிலை தரும். பாஜக கட்சியின் ஆசீர்வாதமும் மோடி, அமீர்ஷா அவர்களின் கடைக்கண் பார்வையும் சசிகலாவிற்கு கிட்டுமானால் அவர் விருப்பம் நிறைவேறும். எடப்பாடி பழனிசாமியின் விருப்பம் நீர் குமுளியாகி விடும்.

& டெல்லிகுருஜி