November 2, 2024

ஊருக்கு உபதேசம் சமச்சீா் கல்வி

[responsivevoice_button voice=”Tamil Male”]

நமது அரசியல் சட்டம் மாநில அரசும் மத்திய அரசும் இருவருமே கல்வித் துறையை கையாளலாம் என்ற நடைமுறையை வகுத்து வைத்துவிட்டது. இதன் விளைவாக மாநிலங்களில் மாநில வரையறைகளுக்கு உட்பட்டு நடக்கிற அரசு மற்றும் தனியார் பள்ளிகளைத் தாண்டி மத்திய அரசு தான் வகுக்கின்ற வரைமுறைகளை வைத்து பள்ளிகளையும் நடத்துவதற்கு அங்கீகாரம் அளித்துவிட்டது. இதில் மாநில அரசின் கல்விக் கொள்கையை மத்திய அரசின் பள்ளிகளில் கையாளவேண்டுமென கட்டாயப்படுத்த முடியாது. மத்திய அரசினுடைய கல்வி கூடங்கள் இல்லாமல் இருந்தபோதோ அல்லது மிக குறைவாக இருந்தபோதோ மாநில அரசின் வரைமுறைகளின் படி படித்து வந்த மாணவர்கள் நகரங்களில் உள்ள மாணவர்களுக்கு சமமாக கல்வி பயில முடிந்தது. போட்டித் தேர்வுகளில் நகரங்களில் உள்ள மாணவர்களுக்கு இணையாகவும் பல நேரங்களில் அவர்களைத் தாண்டியும் கிராம பள்ளிகளில் படித்தவர்கள் வெற்றி பெற முடிந்தது. ஆனால் நாளடைவில் மத்திய அரசின் வேலைகளுக்கான போட்டித் தேர்வுகளில் நகரங்களில் வசதியோடு படித்த மாணவர்கள் மிகுதியாக வெற்றி பெற்றனர். இதன் விளைவாக சிறுக சிறுக மத்திய அரசின் பணிகளானாலும் மத்திய அரசின் உயர் கல்வி கூடங்கள் (IIT) என்கிற பொறியியல் கல்லூரிகளிலும் (AI-IMS) என்கிற அகில இந்திய மருத்துவ கல்வி கூடங்களிலும் படித்து பயிற்சி பெறுவதற்கானாலும் நகரத்து மாணவர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டனர். அவர்களிலும் பெரும்ப-£லானோர் மத்திய அரசின் வரம்புக்குட்-பட்ட CBSC/Metric படிப்பு அல்லது குறைந்த பட்சம் நகராட்சி மன்றம் அமைந்திருக்கும் உயர்கல்வி கூடங்களில் கூட இந்த கல்வி கிடைக்கவில்லை. இப்போது கல்வி ஒரு தொழிலாகிவிட்ட நிலையில்

– திண்டிவனம் க.ராமமூர்த்தி, முன்னாள் எம்.பி.

ஊருக்கு உபதேசம் சமச்சீர் கல்வி

பல்வேறு கொள்கைகளை சொல்லி தமிழக முழுமையிலும் CBSC பள்ளியை ஆரம்பித்-திருக்கிறார்கள். தமிழகத்தின் முதலமைச்சராக 1952ம் ஆண்டு பொறுப்பேற்ற ராஜாஜி அவர்கள் கல்வித் துறையில் மாற்றங்களை புகுத்த முனைந்தார். எடுத்த எடுப்பிலேயே நல்ல நோக்கத்தோடு -ஏற்படுத்த முனைந்த கல்வி முறை சந்தர்ப்ப சூழ்நிலை காரணமாக தவறான கோணத்தில் அணுகப்பட்டது. அந்த கல்வி திட்டத்திற்கு அவர் கொடுத்த பெயரே அதற்கு எதிராக அமைந்துவிட்டது. ‘குலக்கல்வி திட்டம்’ என்ற அடிப்படையில் கொண்டுவந்த மாற்றத்தை காங்கிரஸ் கட்சியில் இருந்தவர்கள் மட்டுமல்லாமல் தந்தை பெரியாரும் அரசியல் கட்சிகளும் இணைந்து அந்தத் திட்டத்திற்கு எதிராக போராட்டம் நடத்தி அதனைத் திரும்பப் பெறச் செய்தார்கள். அதற்கு பிறகு 1954-ல் அமைந்த காமராஜர் ஆட்சி கல்வி துறையின் பாடத்திட்டங்களில் கைவைக்கவில்லை. ஆனால் கல்வியை கிராமங்களுக்கு கொண்டு செல்வதில்

மிகுந்த முனைப்பு காட்டியது. இலவச கல்வியை தந்தார். பள்ளி கல்வியின் உயர்வை அவரின் அமைச்சரவையில் இருந்த சி.சுப்ரமணியம் அவர்கள் மூலமாக பெருநகரங்களுக்கு ஈடான கல்வியை சாதாரண கிராமங்களிலும் நகராட்சிகளிலும் நடைமுறைபடுத்தினார்கள். அந்த கல்வியை பயின்ற மாணவர்கள் மத்திய அரசினுடைய போட்டித் தேர்வுகளிலும், மாநில அரசின் போட்டித் தேர்வுகளிலும் நம்பிக்கையோடு எதிர் கொண்டு பெரிய அளவில் வெற்றி பெற்றார்கள். பெருநகரங்களில் பயின்ற மாணவர்க-ளுக்கு ஈடாக அன்றைக்குத்தான் கிராம புறங்க-ளிலே இருந்தவர்கள் தங்கள் பகுதியிலிருந்து  IAS/IPS தேர்வுகளில் வெற்றிபெற முடிந்தது. மத்திய/மாநில பணிகளிலும் மற்றும் உயர்பதவிகளிலும் இருக்க முடியும் என்பதை கண்கூடாக கண்டார்கள்.

1967-ல் திராவிட முன்னேற்ற கழக ஆட்சி துவங்கியது. கல்வி துறையிலே கைவைக்க துவங்கினார்கள். அவர்களே இன்று வரையிலும் கடைபிடிக்காத பயிற்சி மொழி திட்டத்தை நாடு முழுமையிலும் உள்ளவர்களுக்கு கட்டாயமாக திணித்தார்கள். இந்தி கிடையாது என்றார்கள். பாடபுத்தகங்களிலே மாற்றங்களை செய்தார்கள் இந்த கால கட்டத்தில் மத்திய அரசின் கல்வி கூடங்கள் தமிழகத்தின் பெருநகரங்களில் வேகமாக பரவத் துவங்கியது. முதல் முறையாக மத்திய அரசு கல்வி திட்டத்தை பின்பற்றுகிற  CBSC, Metric ஆகிய பள்ளிகள் முதல் தரமானதாகவும் மாநில கல்விமுறை திட்டத்தின்  State Bord  கல்வி இரண்டாம் தரம் என்ற நிலை உருவாகியது. திமுகவைச் சார்ந்த தலைவர்கள் மட்டுமல்ல அவர்களுக்கு துணைப்போன பிற கட்சியினுடைய தமிழ் ஆர்வலர்கள் அல்லது

அறிஞர்கள் தங்கள் வீட்டு பிள்ளைகளை ஆங்கில பள்ளியில் படிக்கவைத்துக் கொண்டு மற்றவர்களுக்கு மாநில கல்வி என பலமாக சங்கு ஊதினார்கள். அப்போது ஒரு முறை எம்.ஜி.ஆர் ஆட்சி காலத்தில் கல்வி துறைகளைப் பற்றிய விவாதம் நடந்தது. தமிழக சட்டமன்ற பேரவைத் தலைவர்கள், அமைச்சர்கள் ஆகியோர்கள் தங்கள் வீட்டுப்பிள்ளைகளை எந்தெந்த கான்வென்ட்களில் படிக்கவைக்கிறார்கள் என்ற பட்டியலை படிக்க ஆரம்பித்தேன். முதலமைச்சர் எம்.ஜி.ஆர் மிகுந்த பெருந்தன்மையோடு இடைப் புகுந்து இதுப் பற்றி பெரும் விவாதம் இப்போது வேண்டாம் நாம் ஒரு கல்வி கொள்கையை வகுக்கலாம் என்றார். ஆனால் அவர் காலத்தில் அது நடக்காமல் போயிற்று. ஆரம்ப பள்ளி, உயர்நிலைப் பள்ளிகளுக்கான பாடதிட்டங்களில் திமுக அரசு அவ்வப்போது மாற்றியமைத்தார்கள். மக்கள் அதை பெரிதாக எடுத்துக் கொள்ளவில்லை. ஆனாலும் திமுக ஆட்சி மொழிக் கொள்கையால் தனியார் பள்ளிகள் மிகுதியாக விரிவடைய தொடங்கியது. அரசு பள்ளிகளுக்கும் தனியார் பள்ளிகள் மூலமாக நடத்தப்படுகிற விணீtக்ஷீவீநீ மற்றும் சிஙிஷிசி பாடத்திட்டங்கள் நடத்திய பள்ளிகளுக்கிடையே கடுமையான ஏற்றத் தாழ்வுகள் உண்டாயின.இல்லாதவர்களுக்கு அரசு பள்ளிகள் என்ற நிலை ஏற்பட்டது. திமுக அரசு இந்த ஏற்றத் தாழ்வை களைவதற்கு எவ்வித முயற்சியும் எடுக்கவில்லை. இந்த நிலையில் தான் திமுக ஆட்சி மாற்றம் ஏற்படும் என்ற நிலை ஏற்பட்ட பிறகு அவசர அவசரமாக சமச்சீர் கல்வி என்ற பெயரால் புதிய பாடத்திட்டங்களை வகுத்தார்கள். அதனை வகுப்பதற்கு தங்கள் கையடக்கமான வல்லுனர்கள் குழுவை அமைத்தார்கள். இந்த ஆண்டு பள்ளி துவக்கத்தில் திமுக அரசு அறிமுகப்படுத்தியிருந்த பாடதிட்டங்கள்

பள்ளி புத்தகங்களின் மூலமாக வெளியாயிற்று. அதில் குறைகள் நிறைய இருக்கிறது என்ற குற்றச்சாட்டு எழுந்த போது இந்த புத்தகங்களில் உள்ள பாடங்களை அமைத்த வல்லூனர் குழு வாய்திறக்கவில்லை. நாங்கள் செய்தது சரிதான் என்று வாதாடவும் இல்லை. முன்னாள் முதலமைச்சரும் வேண்டுமானால் பாடபுத்தகத்தில் உள்ள என்னுடைய கவிதையை நீக்கிவிடுங்கள். என் மகள் கனிமொழி மூலமாக உள்ளே புகுந்த கவிதையை நீக்கிவிடுங்கள் என்று காழ்ப்புணர்ச்சியை கக்கினாரே தவிர அவை இருந்தாக வேண்டும் என்பதற்கான நியாயத்தை தெரிவிக்கவில்லை. இந்த நிலையில் சமச்சீர் கல்வி என்பது மறுபரிசீலனை செய்ய வேண்டிய கட்டாயத்திற்கு அரசு ஆளாகியுள்ளது. இந்த நிலைப் பள்ளி ஆசிரியர்கள் வலியுறுத்தியுள்ள கோரிக்கைகள் “தினமணி” நாளிதழிலும் மற்ற பத்திரிகைகளிலும் வெளியாகியுள்ளது. இவை மிகுந்த கவனத்தோடு பரிசீலிக்கப்பட வேண்டியவை. அரசு பள்ளிகளில் UKG/LKG வசதிகள் இல்லை என்ற நிலையில் சிறுவயதிலேயே மாணவர்களை கல்வி பாதிக்க துவங்கிவிடுகிறது என்பதை எடுத்துக் காட்டியுள்ளார்கள். இதற்கு பரிகாரமாக இந்த புதிய சமச்சீர் கல்வி பாடத்திட்டத்திற்கு ஏற்ப இடஒதுக்கீடுகள் தேவை என்ற கோரிக்கையும் வைத்துள்ளார்கள். ஆக பணம் படைத்தவர்களின் பிள்ளைகள் படிப்பிற்கும், சாதாரண மக்களின் பிள்ளைகள் படிப்பிற்கும் உள்ள வேறுபாட்டை வேறு முறையில் நீக்க முடியாது என்ற நிலை இதில் காணமுடிகிறது. மாநில அளவிலான வேலைவாய்ப்புகளுக்கு மட்டுமே  State Board என்று சொல்லப்படுகிற மாநில அரசு பாடத்திட்டம் உதவும் என்ற நிலை ஏற்படுத்துகிறது. அதுதான் நிலை என்றால் அகில இந்திய அளவிலான வேலைவாய்ப்புக்கான போட்டி தேர்வுகளுக்கு பணம் படைத்தவர்கள் மட்டுமே தங்கள் பிள்ளைகளை படிக்கவைக்கின்ற (CBSC/Metric) மற்றும்  International Board ஆகியவற்றில் படிக்கும் மாணவர்களுக்கு மட்டுமே என்று ஒதுக்கப்படும் நிலை ஏற்பட்டுள்ளது. இதில் சமச்சீர் கல்விக்காக மக்கள் உணர்வுகளை தூண்டிவிட்டு போராட்டம் நடத்துகிற தமிழக அரசியல் தலைவர்களை பார்க்கிறேன். கருணாநிதி உட்பட தங்கள் வீட்டுப் பிள்ளைகள் மற்றும் பேரன்களை அரசு பள்ளிகளில் படிக்க வைக்கவில்லை இன்னமும் சொல்லப்போனால் காண்வெண்டிலே ஆங்கில பயிற்சி மொழி எடுத்து படிக்க வைத்தவர்களும் தனியார் நடத்தும் கான்வென்ட்டுகளில் படிக்க வைப்பவர்களும் தங்கள் பிள்ளைகளை ஊட்டியில் படிக்க வைப்பவர்களும், போராடிக் கொண்டிருக்கிறார்கள். இவர்கள் என்ன விரும்புகிறார்கள். எதற்காக இதைச் செய்கிறார்கள். இது அரசியல் மோசடியா அல்லது சமூகத்திற்கு செய்யும் துரோகமா என்பதை ஊன்றிப் பார்க்க வேண்டும். தங்களுடைய பிள்ளைகள் இந்தி படித்துள்ளதால் சிறந்து விளங்குகிறார்கள் என்று சொல்லுகிற முன்னாள் முதல்வர் தங்கள் பிள்ளைகளையும் தங்களை சார்ந்தவர்கள் பிள்ளைகளையும் கான்வென்டில் படிக்கவைத்துக் கொண்டி-ருப்பவர்கள். புதிய திட்டத்திற்கு வாருங்கள் என்று சொன்னால் அது நியாயமில்லை. பொதுவான பாடத்திட்டங்களை படிப்பதற்கு அரசு வழிவகை செய்தாக வேண்டும். மாநில கல்வித் திட்டத்தின் தரத்தை உயர்த்த வேண்டுமே தவிர தாழ்த்துவதிலே வேகம் காட்டி எவ்வித பயனுமில்லை. அரசியல் தலைவர்களைச் சார்ந்தவர்கள் நடத்துகிற தனியார் பள்ளிகளில் சமச்சீர் கல்வி மட்டுமே அமலாக்கப்படும். மத்திய அரசின் சிஙிஷிசி பாடத்திட்டத்தை கையாள மாட்டோம் என்ற கொள்கையை இவர்கள் ஏற்க முன்வருவார்களா? தாங்களே செய்யாததை மற்றவர்கள் செய்ய வேண்டும் என்பது தமிழ் சமுதாயத்திற்கு செய்கிற மிகப்பெரிய கேடாகும். “ஊருக்கு உபதேசம்“என்ற பழஞ் சொற்றொடர் நினைவுக்கு வருகிறது.