December 6, 2024

உள்ளாட்சி தேர்தல் முடிவுகள்

ஊராட்சி உள்ளாட்சி மன்ற தேர்தல் 9 மாவட்டங்களில் நடைபெறுகிறது. இந்த 9 மாவட்டங்களிலும் வன்னியர்கள் அதிக அளவில் வசிக்க கூடிய மாவட்டங்களாகும். இந்த உள்ளாட்சி தேர்தல் முடிவுகள் வழக்கமாக ஆளுங்கட்சி சாதகமாக கடந்த காலங்களில் இருந்து வந்துள்ளது. ஆனால் தற்போதைய நிலை ஆளுங்கட்சி திமுகவுக்கு மிக குறைந்த அளவிலேயே வெற்றி வாய்ப்பு ஏற்படும் என்று கூறப்பட்டாலும் எதிர்கட்சியான அதிமுக கட்சியில் இன்னும் மக்கள் வாக்கு வங்கியும் குறையவில்லை என்பதை இந்த தேர்தல் முடிவு மூலம் தெரிந்துக் கொள்ளலாம். ஒரு வேளை திமுகவுக்கு எதிராக தேர்தல் முடிவுகள் அமைந்து விட்டால் அதிகளவு பாதிக்கப்படப் போகிறவர்கள் வன்னியர்கள் என்பதை புரிந்துக் கொள்ளவேண்டும். இதனால் திமுக தலைமையின் பார்வை வன்னியர்களுக்கு எதிராகவும் திரும்பக் கூடும். பல இடங்களில் திமுக தனித்து விடப்படுகிறது. குறிப்பாக திருப்பத்தூர் இராணிப்பேட்டை வேலூர் ஆகிய மாவட்டங்களில் திமுகவுக்கு எதிராக அதிமுக அணியில் காங்கிரஸ் கட்சியும் இணைந்து செயல்படுகின்ற ஒரு நிலை உருவாகிவருகின்றது. இதற்கு உதாரணமாக திருப்பத்தூர் மாவட்டத்தில் உள்ள ஏலகிரி ஊராட்சியில் திமுக மட்டும் தனியாகவும் அதிமுக, காங்கிரஸ் பாஜக, பாமக உள்பட பல கட்சிகள் பல நிலைகளில் இருந்து வருகிறது என்பதை கருத்தில் கொள்ளவேண்டும். ஆகவே ஊராட்சி உள்ளாட்சி மன்ற தேர்தல்களில் யார் ஆட்சி என்பதை மக்கள் தான் தீர்மானிக்க வேண்டும்.