May 24, 2022

உள்ளாட்சி தேர்தலுக்கு தடையா?

நகர்புற உள்ளாட்சிமன்ற தேர்தலை கட்டாயம் வரும் 27-ந் தேதிக்குள் அறிவித்தாக வேண்டும் என்று உச்சநீதிமன்ற உத்தரவு நடைமுறையில் இருக்கும் பொழுது தேர்தல் நடந்தால் ஆளுங்கட்சியான திமுகவிற்கு அதிக அளவில் இழப்பை ஏற்படுத்தக் கூடும் என்ற அச்சம் நிலவுவதால் இன்னொருபுறம் தலித் மக்களுக்கு வார்டு பிரிப்பதில் போதிய இடஒதுக்கீடு தனியாக மாநில தேர்தல் ஆணையம் அறிவிக்கவில்லை என்று கூறி பகுஜன்சமாஜ் கட்சி நீதிமன்றத்தை நாடி உள்ளது. ஒருவேளை இன்று மாலை நகர்புற உள்ளாட்சி மன்ற தேர்தல் நடைபெறும் தேதி அறிவிக்கப்படலாம். அதே போல் நாளையே நீதிமன்றத்தின் மூலம் தேர்தலை தள்ளிவைப்பதற்கான தடை ஆணையும் பெறுவதற்கான முயற்சியும் நடைபெற்று வருவதாக கூறப்படுகிறது. உச்சநீதிமன்ற வழிகாட்டுதல் படியும், சென்னை உயர்நீதிமன்ற அறிவிப்பின் படியும் கட்டாயம் தேர்தல் நடத்தவேண்டிய சூழ்நிலைக்கு மாநில அரசு தள்ளப்பட்டுள்ளது. இதை மீறினால் நீதிமன்றம் அவமதிப்பும் ஏற்படலாம் என்ற அச்ச உணர்வும் மாநில அரசுக்கு இருப்பதால் தேர்தலை நடத்துவதற்கு ஆயத்தமாவதை தவிர வேறு வழியில்லை என்ற இக்கட்டான சூழலில் ஆளுங்கட்சியான திமுக உள்ளது. நடக்கப்போவது என்ன என்பதை நாளை அறிந்து கொள்வோம்.

– டெல்லிகுருஜி