சேப்பாக்கம் தொகுதி சட்டமன்ற உறுப்பினரும் இளைஞரணி செயலாளருமான உதயநிதி தனது பிறந்தநாளை இன்று கொண்டாடுகிறார். அமைதியான முறையில் பரபரப்பு இல்லாமல் தனது தாத்தா கலைஞர் கருணாநிதி அவர்கள் ஆசியைப் மானசீகமாக பெற்றுக் கொண்டு அவரது நினைவிடம் சென்றுவந்தார். பள்ளிக்கல்வித் துறை அமைச்சரும் உதயநிதியின் நண்பருமான அன்பில்மகேஷ் பொய்யாமொழி சேப்பாக்கம் தொகுதியிலும் உதயநிதி பிறந்தநாளை முன்னிட்டு நிகழ்ச்சிகளில் பங்கேற்று தொகுதிவாழ் மக்களுக்கு நிவாரண உதவிகளை வழங்கி பிறந்தநாள் விழாவை கொண்டாடினார். தனது பிறந்தநாளை ஆடம்பரமாக கொண்டாட வேண்டாம் என்று உதயநிதி வேண்டுகோள் விடுத்த பின்னும் தமிழக முழுவதும் உள்ள திமுகவினர்கள் பல்வேறு நலத்திட்ட உதவிகளை வழங்கி உதயநிதியின் பிறந்தநாளை சிறப்பாக கொண்டாடி மகிழ்ந்தார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
-டெல்லிகுருஜி
More Stories
கடலூர் கிழக்கு மாவட்ட தி.மு.க சார்பு அணிகளின் மாவட்ட நிர்வாகிகள் சந்திப்பு கூட்டம்
திருமாவளவன் அரசியல் நிலைப்பாடு என்ன? 2026 தேர்தல் – திமுக அணியில் தொடருமா?
அவசரப்படுகிறார் நடிகர் விஜய்
வார்த்தையை விடுகிறார் ஜெயகுமார்…