November 2, 2024

உடல் எடையை குறைக்க பூசணிக்காய்

பூசணிக்காய் விலை மலிவானது என்பதால் பலராலும் விரும்பப்படுவதில்லை. ஆனால் அதில் உடலுக்கு தேவையான பல நல்ல சத்துக்கள் இருக்கின்றன என்பது இவர்களுக்கு தெரியுமா? பூசணிக்காயில் உள்ள காம்ப்ளக்ஸ் கார்போஹைட்ரேட், உடலுக்குத் தேவையான ஆற்றலை சாப்பிட்ட உடனே வழங்கும். பூசணிக்காயில் அதிகளவு நார்ச்சத்து உள்ளது. இது உடல் பருமன் குறைய விரும்புகிறவர்களுக்கு கண்கண்ட மருந்து, உடலில் உள்ள தேவையில்லாத கொழுப்புகளை கரைத்து உடலை பூசினாற்போன்று அழகாக்கும்.

பூசணிக்காயின் ஆரஞ்சு நிறம், அதில் இருக்கிற பீட்டா கரோட்டின் நோய் எதிர்ப்புச் சக்தியைப் பெருக்கும். கண்பார்வைக்கும் நல்லது. சருமத்தில் ஏற்படுகிற புண்களை பூசணிக்காய் விரைவாக ஆற்றும், சூரிய வெப்பத்தில் இருந்து பாதுகாக்கும். தழும்புகள் மறைய துணை நிற்கும். உடற்பயிற்சியில் ஈடுபடுகிற போது, விளையாட்டு வீரர்கள் பயிற்சியில் ஈடுபடுகிறபோது, எலெக்ட்ரோலைட் சம நிலையை மேம்படுத்த உதவுகிறது. வாழைப்பழத்தில் உள்ளதை விட அதிகளவிலான பொட்டாசியமும் இதில் இருக்கிறது.

பூசணிக்காயில் உள்ள வைட்டமின் ‘சி’ சளியில் இருந்து நிவாரணம் தரும். காய்ச்சலை மட்டுப்படுத்தும், நோய் எதிர்ப்பு சக்தியை பெருக்கும். பூசணிக்காயில் இருக்கிற பீட்டாகரோட்டின், உங்கள் உடலில் ஓட்டுமொத்த நோய் எதிர்ப்புச் சக்தியை அதிகரிக்க உதவும். எச்.ஐ.வி, வைரஸ் பாதித்தவர்களுக்கு ஆராய்ச்சி நடத்தப்பட்டதில் பீட்டாகரோட்டின் சாப்பிடுகிற போது, நோய் தாக்கம் குறைந்திருப்பதாக ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்து இருக்கிறார்கள். சமையலில் வாரம் ஒரு முறையேனும் இல்லத்தரசிகள் பூசணிக்காய் பயன்படுத்தலாம்.