ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதி உறுப்பினராக இருந்தவர் காங்கிரஸ் கட்சியை சேர்ந்த திருமகன் ஈ.வெ.ரா., இவர் திடீரென இறந்தவிட்டதால் அந்த தொகுதிக்கு விரைவில் இடைத்தேர்தல் நடத்துவதற்கு தேர்தல் ஆணையம் முயற்சிகளை எடுக்கும். காரணம் வடமாநிலத்தின் உள்ள 9 மாநிலத்திற்கு நடைபெறும் சட்டமன்ற தேர்தலோடு சேர்த்து தமிழ்நாட்டில் காலியாக உள்ள ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதிக்கும் தேர்தல் நடைபெறும் வாய்ப்பு உள்ளது. அப்படி தேர்தல் நடந்தால் அதிமுக தரப்பில் எடப்பாடி பழனிசாமி வேட்பாளரை நிறுத்துவார். அதற்கு எதிராக காங்கிரஸ் கட்சி வேட்பாளரை நிறுத்தினால் ஒருவேளை திமுக கூட்டணி தோல்வியை தழுவும் வாய்ப்பு ஏற்படும் என்பதால் இடைத்தேர்தலில் காங்கிரசுக்கு பதிலாக அந்த தொகுதியில் திமுகவே தனது வேட்பாளரை நிறுத்தினால் சுலபமாக வெற்றிப்பெற முடியும் என்று ஆளுங்கட்சி தரப்பு கணக்குப்போடுகிறது. இன்னொருபுறம் அதிமுகவிடம் இருந்து பாஜக கட்சி அந்த தொகுதியை பெற்று தங்கள் தரப்பில் இருந்து வேட்பாளரை நிறுத்தி திமுகவுக்கு ஒரு நெருக்கடியை ஏற்படுத்தலாம் என்றும் அதற்கு அதிமுக தரப்பு ஒத்துவருமா என்பதையும் தற்போது ஆலோசனையில் இருந்து வருகிறது.
ஆனால் 6 மாதத்திற்குள் சட்டமன்ற தேர்தல் நடத்தி முடிக்கவேண்டும் என்பதால் ஈரோடு கிழக்கு மாவட்டத்திற்கு தேர்தல் கமிஷன் தேர்தலை நடத்துவதற்கு விரைவில் அறிவிப்பை வெளியிடலாம். ஒருவேளை மகன் இறந்துவிட்ட சோகத்தை மறந்து ஆறுதல் அடைவதற்காக அந்த தொகுதியில் மறைந்த காங்கிரஸ் வேட்பாளர் திருமகன் ஈவெராவின் மனைவிக்கு அந்த வாய்ப்பை வழங்கினாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை. அல்லது ஈ.வி.கே.எஸ்.இளங்கோவனே தேர்தலில் போட்டியிடுவதற்கும் வாய்ப்பு உண்டு.
– சாமி
More Stories
2026 தேர்தல் – திமுக குழு ஆலோசனை
வன்னியகுல சத்ரிய நலவாரியம்
ஐ.நா. மனித உரிமை பேரவை
சுவிட்ஜர்லாந்து நாட்டின் ஜெனிவா நகரில் நடைபெற்றது