November 3, 2024

இழந்த செல்வத்தை மீட்க வழிபட வேண்டிய கோவில்..

சுக்ரீவனை ஆபத்திலிருந்து காத்த இத்தல சிவபெருமானை வழிபட்டால், நமக்கும் இன்னல்கள், அச்சுறுத்தல்களில் இருந்து விடுபட உதவுவார் என்பது நம்பிக்கையாக உள்ளது.

இழந்த செல்வத்தை மீட்க வழிபட வேண்டிய கோவில்..
ஆபத்சகாயேஸ்வரர் திருக்கோவில்
கும்பகோணம் – மயிலாடுதுறை சாலை மார்க்கத்தில் அமைந்துள்ள இக்கோவில், தேவாரப்பாடல் பெற்ற சிவத்தலங்களில் காவிரியின் தென்கரையில் இருக்கும் 31-வது திருத்தலமாகும்.

திருநாவுக்கரசரும், திருஞானசம்பந்தரும் பதிகம் பாடிய திருத்தலங்களில் ஒன்று, ‘தென்குரங்காடுதுறை ஆபத்சகாயேஸ்வரர் திருக்கோவில்.’ வாலியால் துரத்தப்பட்ட சுக்ரீவன், இத்தலத்தில் உள்ள இறைவனை வழிபாடு செய்தான்.

இதன் காரணமாக ராமரின் அருள் கிடைத்து, தான் இழந்த செல்வங்கள் அனைத்தையும் பெற்றான். வானரமாகிய சுக்ரீவனால் பூஜிக்கப்பட்டதால், இத்தலம் ‘தென்குரங்காடுதுறை’ என்றானது. சுக்ரீவனை ஆபத்திலிருந்து காத்த இத்தல சிவபெருமானை வழிபட்டால், நமக்கும் இன்னல்கள், அச்சுறுத்தல்களில் இருந்து விடுபட உதவுவார் என்பது நம்பிக்கையாக உள்ளது. இந்த ஆலய மூலவரான ஆபத்சகாயேஸ்வரரை வழிபட்டால் இழந்த செல்வத்தை மீட்கலாம்.

இந்த ஆலயம் கும்பகோணத்தில் இருந்து 16 கிலோமீட்டர் தொலைவில் உள்ளது.