September 18, 2024

இலங்கை அகதிகள் முகாம் இனி ‘மறுவாழ்வு முகாம்’ என அழைக்கப்படும்- மு.க.ஸ்டாலின் அறிவிப்பு

தமிழக சட்டசபையில் இலங்கை அகதிகள் முகாம் பற்றி முதல்- அமைச்சர் மு.க.ஸ்டாலின் முக்கிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டார். இது தொடர்பாக அவர் பேசியதாவது:-

தமிழகத்தில் உள்ள இலங்கை தமிழர்கள் அகதிகள் அல்ல. அவர்களுக்கு துணையாக நாங்கள் இருக்கிறோம். அந்த உணர்வோடு இலங்கை அகதிகள் முகாம் இனி இலங்கை தமிழர் மறுவாழ்வு முகாம் என அழைக்கப்படும் என்று அரசு ஆணையிட்டு இருக்கிறது.