July 18, 2024

இந்திய பொருளாதார ஏற்றத்தாழ்வை சமநிலை அடைய என்ன செய்ய போகிறோம்?

இந்தியாவில் பணக்காரர்கள் எண்ணிக்கை மட்டுமே இந்திய பொருளாதாரத்தை தன் வசமாக்கி கொண்டிருக்கிறார்கள். குறிப்பாக மிக மிக குறைந்த எண்ணிக்கையில் உள்ள பணக்காரர்கள் எண்ணிக்கை ஆதிக்கம் நிறைந்திருக்கிறது. அதே நேரம் ஏழ்மையும் வறுமையும் இந்தியாவில் மிக மிக தாழ்ந்த நிலையில் அதிக எண்ணிக்கையில் ஆறு போல் ஒடுகிறது. உலகப் பொருளாதார ஏற்ற தாழ்வு குறித்த அறிக்கை இவ்வாறு கூறுகிறது. இந்த அறிக்கையைப் பற்றி விஷயம் குறித்து பொருளாதாரத்தில் நோபால் நிபுணர்களான அபிஜித் பேனர்ஜி மற்றும் எஸ்தர் அவர்கள் எழுதிய முன்னுரையில் கூறியிருப்பதாவது.

இந்தியா இந்த விஷயத்தில் முதல் இடத்தில் இருப்பது மிகவும் கவலையளிப்பதாக உள்ளது என்று கூறுகிறார். குறிப்பாக பணக்காரர்களுக்கும் ஏழைகளுக்கும் இடைவெளி என்பது நாளுக்கு நாள் அதிகமாகி சென்று கொண்டிருக்கிறது. இது ஏற்றத்தாழ்வை மட்டுமே பிரதிப்பலிக்கிறது. இந்த இடைவெளியை குறைத்து பொருளாதார சமநிலையை ஏற்படுத்துவதற்காகவே நாடு விடுதலைக்குப் பிறகு தோற்றுவிக்கப்பட்டது தான் பண்டிட் ஜவஹர்லால் நேரு திட்டமான ஐந்தாண்டு திட்டம். இந்த திட்டத்தின் மூலம் இந்தியாவில் உள்ள ஒவ்வொரு மாநிலங்கள் மூலம் மிக பெரும் அளவில் வளர்ச்சியடைவதற்கும் மாநில உரிமைகளை பெற தேவையான நிதியை பெறுவதற்கு இந்த திட்டம் பெரிய அளவில் கைகொடுத்து வந்தது. இதன் மூலம் இந்தியா முழுவதும் பல அணைகட்டுகளும், தொழிற்சாலைகளும், பொதுதுறை நிறுவனங்களும், கல்வி நிறுவனங்களும் பெரும் அளவில் கட்டமைக்கப்பட்டுள்ளது. இதனால் பொருளாதார சமநிலையை நோக்கி இந்தியாவின் பொருளாதார திட்டம் பயணித்தது கொண்டிருந்தது.

மேலும் ஓரளவிற்கு ஏற்றத்தாழ்வுகளை சமநிலைக்கு கொண்டு வருவதற்கு முயற்சிகள் எடுக்கப்பட்டு வந்தது. சு0பு4க்கு பிறகு ஐந்தாண்டு திட்டம் கைவிடப்பட்டு விட்டது. நிதிஅயோக் திட்டம் தொடங்கப்பட்டது. மதம் சார்ந்த பொருளாதார திட்டங்கள் பொதுத்துறை நிறுவனங்கள் பு947 இந்தியா விடுதலைக்கு அடைவதற்கு முன்னார் ஏழை பணக்காரர் என்ற இடைவெளி குறைய ஆரம்பித்தது. அது தற்போது அதிகரித்து வருகிறது. பொருளாதார துறைக்கு அளித்த முக்கியத்தவம் சாதி, மதம், அரசியல் கோட்பாடுகள் ஆகியவற்றை கடந்த சமூக முன்னேற்றம் என்பதில் காட்டிய அக்கறை ஏழை பணக்காரர் இடையில் இருந்த இடைவெளியை குறைக்க ஓரளவு உதவின. அந்த நிலை பு984க்கு பிறகு மத்திய அரசு கொண்டுவந்த தாராளமாக்கு கொள்கையை நடைமுறைப்படுத்த வேண்டி பொதுத்துறை நிறுவனங்களை தனியாருக்கு விற்பனை செய்யும் முறையை சு0பு4க்கு பிறகு வந்த அரசு குறிப்பாக பிரதமர் மோடியின் அரசு மிக தீவிரமான கடைப்பிடிக்க தொடங்கிவிட்டது.

கடந்த ஆட்சியாளர்கள் பின்பற்றிய கொள்கைகளான புராதண சமுதாய கட்டமைப்பு சிறிது சிறிதாக தளர்ந்து வந்தது. இது பிரதமர் மோடி வந்தப் பிறகு இந்த கட்டமைப்பு இது உறுதிப்படுத்தும் முயற்சியா இந்திய ஒற்றுமை என்பது மதத்தின் அடிப்படையில் கட்டமைக்கும் முயற்சி செய்வதினால் முந்தைய வளர்ச்சியும், தளர்ச்சியும் தற்போதைய ஆட்சியில் ஏற்றத்தாழ்வு ஏழை பணக்காரன் என்ற விகிதாச்சாரம் வளர்ந்து உயர்ந்து நிற்கிறது. சமூக பொருளாதார ஏற்ற தாழ்வுகளை இப்படியே நாம் வளைத்து வந்தால் அரசியல் ஜனநாயகத்தின் வலுவான கட்டமைப்பு அதன் உறுதித்தன்மை தூள் தூளாக நொருங்கிவிடும் அபாயம் ஏற்படும். இது இந்தியா போன்ற நாடுகளுக்கு உகந்ததல்ல.

அரசும் மதமும் இணைக்க கூடாது. மதம் என்பது வேறு அரசியல் என்பது வேறு இரண்டும் தனித்திருப்பது மிக மிக அவசியம். காரணம் பன்முகத் தன்மை கொண்ட இந்தியாவில் மதம் சார்ந்த அரசியல் கூடாது என்பதை மத்திய அரசாங்கம் கடைப்பிடிக்க வேண்டும். மொழி வாரியங்கள் இந்தியாவில் பிரிக்கப்பட்ட பொழுது அதிகாரங்களை பகிர்ந்து அளிக்காமல் அதிகார குவியலை மத்திய அரசு தன் வசம் வைத்துக்கொண்டிருப்பதினால் மாநிலத்தில் வெவ்வே-று மதம் வெவ்வேறு மொழி பேசுகிற மக்களை கொண்டு செயல்படும் மாநில அரசால் மக்களுக்கு தேவையான நேரடி திட்டங்களை எவ்வகையில் செயல்படுத்த இயலும் என்பதை மத்திய அரசாங்கம் உணர்ந்து சில விஷயங்களை மாநில அரசுடன் பகிர்ந்து கொள்வதற்கு மத்திய அரசு யோசிக்காமல் முன்வரவேண்டும்.

உதாரணத்திற்கு தமிழ்நாட்டை பொறுத்தவரை கல்வி என்பது பொது பட்டியலில் இருந்து மாநில அரசு பட்டியலுக்கு மாற்றப்படுமேயானால் மருத்துவம், பொறியியல் படிப்புகளுக்கு மக்கள் விருப்பத்திற்கே செயல்பட முடியும். தேவையற்ற தேர்வுகள் (நீட்) மாநில அரசே முடிவு செய்துகொள்வதற்கு முன்வரும். இதுபோன்ற குறைந்தபட்ச சில திட்டங்களையாவது ஒவ்வொரு மாநிலத்தின் நலன் கருதி மத்திய அரசு அமுல்படுத்துமேயானால் பொருளாதார ஏற்றத்தாழ்வுகள் குறைவதற்கான மாற்றங்களை கொண்டுவருவதற்கான வழிகளை மாநில அரசுகளே செய்து கொள்ள முடியும். அரசுக்காக மக்களா? மக்க-ளுக்காக அரசா? என்ற கேள்விக்கு விடை காணமுடியும். ஏழை, பணக்காரர் என்ற நிலையை மாற்றி வறுமை கோட்டை உடைத்து ஏற்றத்தாழ்வற்ற சமநிலை பொருளாதாரத்தை நடைமுறைப்படுத்தி ஏழையின் சிரிப்பில் இறைவனை காணலாம் என்பதேயே உலக ஏற்றத்தாழ்வு குறித்த சமநிலைஅறிக்கை தெரியப்படுத்துகிறது.

காலத்திற்கேற்ப கால நிலைகளுக்கு தக்கவாறு தகுந்த நேரத்தில் தங்களையும், தங்கள் மக்களையும் உயர்த்திக் கொண்டால் ஒழிய நாட்டில் வளர்ச்சியும் ஏற்படாது என்பதை உணர்ந்து செயல்பட்டால் ஒரு தேசத்தின் அடையாளம் வரலாறு நிலைத்து நிற்கும்.

– டெல்லிகுருஜி