October 11, 2024

இந்தியாவின் நம்பிக்கை நட்சத்திரமாக ஃரபேல் போர் விமானம்

இந்தியாவின் தற்சார்பு கொள்கையால் வெகுவிரைவில் இந்தியா வளரும் நாடுகளில் இருந்து, வளர்ந்த நாடுகளில் பட்டியலில் தன்னை அடையாளப்படுத்தி கொள்ளும் என்பதில் ஆச்சரியமில்லை. மறைந்த குடியரசு தலைவர் ஏ.பி.ஜே.அப்துல்கலாம் அவர்கள் சு0சு0 ஆண்டுகளில் இந்தியா வளர்ச்சி அடைந்த நாடாக உருவெடுக்கும் என்று தனது கருத்தினை பதிவு செய்திருந்தார். அதன் தொடர்ச்சியாக பிரதமர் மோடி அவர்கள் மத்திய அரசை வழிநடத்தி செல்வதுடன் உலக நாடுகளின் நட்பினை பெற்று பல்வேறு சுற்றுப் பயங்கணை மேற்கொண்டு இந்தியாவின் பலத்தை உலக அரங்கில் பறைசாற்றியுள்ளார். அதற்கேற்றார் போல் இந்தியா வெகு விரைவாக பல துறைகளில் முன்னேற்றத்தை நோக்கி பல்வேறு திட்டங்களால் உள்நாட்டு உற்பத்தியை அதிகரித்து வருவதுடன் அயல்நாட்டு முதலீடுகளையும் மிகப் பெரிய அளவில் ஈர்த்து வருகிறது. குறிப்பாக பாதுகாப்புத் துறையில் இந்தியாவின் பலத்தை நிரூபிக்கின்ற அளவில் தற்சார்பு கொள்கையை முன்னெடுத்து செல்கிறது. இந்திய ராணுவத்தின் பலத்தை உயர்த்துகின்ற அளவில் ஃரபேல் அதி நவீன போர் விமானத்தை பிரான்சில் இருந்து 36 விமானங்களைப் பெறுவதற்கு ஒப்பந்தம் செய்து அதில் ஐந்து போர் விமானங்கள் இந்தியாவிற்கு வந்துள்ளது. இந்த தகவல் மூலம் இந்தியாவின் பாதுகாப்பு பலம் வாய்ந்ததாக உருவெடுத்து உள்ளது. இந்த ஃரபேல் விமானம் என்பது எதிரி நாட்டு போர் விமானங்களை மிக துல்லியமாக கண்டறிந்து தாக்குதல் நடத்தி இந்தியாவிற்கு வெற்றியைப் பெற்றுதருகின்ற அதி நவின தொழிற் ̧ட்பம் நிறைந்த நவின போர் விமானம் ஆகும்.

இந்தியாவை எதிரியாக கருதக் கூடிய பல நாடுகள் இனிவரும் காலங்களில் இந்தியாவின் நட்பை நாடுகின்ற அளவிற்கு தங்கள் எதிர்ப்பு நிலைகளை கைவிட்டு நட்பு பாராடுகின்ற அளவிலே இந்தியாவை அணுகுவார்கள் என்பதற்கு ஃரபேல் போர் விமானம் இந்தியாவிற்கு வருகை தந்ததும் இந்தியாவின் பாதுகாப்பை பலப்படுத்துவதும் இந்திய ராணுவம் பலம் வாய்ந்ததாக உள்ளது என்பதையும் உலக நாடுகளுக்கு எடுத்துக்காட்டும் நம்பிக்கை நட்சத்திரமாக, அடையாளமாக ஃரபேல் விமானம் பாதுகாப்புக்கு வலிமையான ஒன்றான இருப்பது இந்தியர்களுக்கு வரப்பிரசாம்