November 2, 2024

இடம் தர மறுக்கும் அதிமுக இடம் மாறும் கேப்டன்

அதிமுக கூட்டணியில் இருந்து வெளியேறுகிறது கேப்டன் விஜயகாந்த் கட்சியான தேமுதிக. கடந்த நாடாளுமன்ற தேர்தலில் நடைபெற்ற கசப்பான அனுபவங்களும் தங்கள் கட்சிக்கு கிடைக்க வேண்டிய நியாயமான இடங்களும் எதிர்வரும் சட்டமன்ற தேர்தலில் அதிமுக கூட்டணியில் இருந்தால் நமக்கு கிடைக்காது என்று தேமுதிக நிர்வாகிகள் மனகுழப்பத்தில் இருக்கிறார்கள். இதை எப்படி கட்சி தலையிடம் வெளிப்படுத்துவது என்று வழிதெரியாமல் அடக்கி வாசிக்கிறார்கள். கட்சியின் தலைமையோ தொண்டர்களின் உணர்வுகளை புரிந்துக் கொண்டு உடல் நலமின்றி கேப்டன் விஜயகாந்த் உள்ள நிலையில் எதிர்வரும் சட்டமன்ற தேர்தலில் தேமுதிக எதிர்பார்க்கும் தொகுதிகளை வழங்காது என்றும் இதனால் அதிமுக கூட்டணியில் இருந்து வெளியேறுவதே கட்சியின் நலனுக்கு நன்மை பயக்கும் என்ற முடிவுக்கு பிரேமலதா விஜயகாந்த் வந்துள்ளாராம்.

ஒருவேளை மூன்றாவது அணியில் இடம் பெறலாம். அல்லது காங்கிஸ் திமுக கூட்டணியில் இடம் பெறலாம் என்று ஆழ்ந்த சிந்தனையிலும் கேப்டன் கட்சி உள்ளது.