September 18, 2024

ஆணைமுத்து பெரியாரின் சிந்தனைகளை உலகிற்கு காட்டிய ஆவண முத்து!

குறிஞ்சி மலை போல் கொள்கையில் உயர்ந்து நின்றார்
குன்றிமணி போல நழுவாது கொள்கையில் எழுந்து நின்றார். தமிழனை தாழ்த்துவது இந்த தரணிக்கு தெரிந்த கலை
அது போல் இந்த தமிழனை அடையாளம் காணது
நாம் கொடுக்கவில்லை அவருக்கான உரிய விலை.
எளிமை, இனிமை, இரக்கம், உழைப்பு, கொள்கைப் பிடிப்பு
என்ற தரவுகளின் உச்சம் இவர்.
பெரியாருக்கு பின் அவர் வழியில் நின்ற தத்துவத்தின் மிச்சம் இவர். பெரியார் களஞ்சியம் இவர் தொகுத்த தொல்காப்பியம்
அவைகள் அனைத்தும் நம் தமிழ் வரலாற்றை எடுத்துக் கூறும்
நல் கோப்பியம். புகழோடு தோன்றினார். பகுத்தறிவை ஊன்றினார். திகழும் தமிழ் சமுதாயத்திற்கு ஒரு விசைகாட்டியை தந்து சென்றார். தமிழினம் ஒன்றுபடுமா தமிழ் தேசியம் வென்றெடுக்குமா? அமிழ்தினும் தமிழ் மண்ணில் நாளை ஒரு கருத்து ஆலமரம் வளர்ந்திடுமா! மூத்த குடி ! தமிழ் குடி மீண்டும் துளிர் விடுமா! ஒன்றுபடுமா தமிழ் சமுதாயம்.

உலகம் வியக்க ஒன்றுபடுமா! பகுத்தறிவில் பிறந்தோர் இன்று மூச்சடிக்கு பயணம் கொள்கின்றார்.
அந்த சிந்தனையாளர் வழியில் பயணிப்போம்.
அவன் விட்டு சென்ற செய்திகளை வரும் நாட்களில் பாதுகாத்து பத்திரப்படுத்துவோம். வாழ்க அவர் புகழ், வாழ்க அவர் தொண்டு வாழிய அய்யா ஆணைமுத்து அவர் என்றும் தமிழரின் ஒட்டு மொத்த சொத்து.

முனைவர்
கதிர் விஸ்வலிங்கம்

முன்னாள் பேராசிரியர்
அண்ணா பல்கலைகழகம்
9840236939
– வெளியீடு அக்னிமலர்கள்.