பல வெற்றி படங்களில் நாயகனாகவும், வில்லனாகவும் நடித்து பிரபலமானவர் அர்ஜுன். இவருடன் சிறந்த கதைகளை தேர்வு செய்து நடித்து வரும் ஐஸ்வர்யா ராஜேஷ் இணைந்து ஒரு படத்தில் நடித்து வருகிறார். ஆக்ஷன், புதிய கிரைம் திரில்லர் பாணியில் உருவாகி வரும் இப்படத்திற்கு ‘தீயவர் குலைகள் நடுங்க’ என தலைப்பிடப்பட்டுள்ளது.
தற்போது தீயவர் குலைகள் நடுங்க படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டரை படக்குழுவினர் வெளியிட்டுள்ளனர். இந்த பர்ஸ்ட் லுக் போஸ்டர் தற்போது சமூக வலைத்தள பக்கத்தில் கவனம் பெற்று வருகிறது. ஜி.எஸ்.ஆர்ட்ஸ் தயாரிப்பாளர் ஜி.அருள் குமார் தயாரிப்பில், தினேஷ் இலெட்சுமணன் இயக்கும் இப்படத்தின் இறுதிகட்ட பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. பரத் ஆசீவகன் இசையமைக்கும் இப்படத்திற்கு சரவணன் அபிமன்யு ஒளிப்பதிவு செய்துள்ளார்.
More Stories
வைரலாகும் அவதார்-2 படத்தின் புகைப்படங்கள்
விக்ரம் படம் குறித்த வீடியோவை பகிர்ந்த கமல்.. கொண்டாடும் ரசிகர்கள்
ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இயக்கும் படத்தில் சிம்பு?