அமெரிக்க முன்னாள் அதிபர் டொனால்டு டிரம்ப் ஓகியோ மாகாணத்தில் தனது ஆதரவாளர்கள் மத்தியில் பேசினார். அப்போது அவர், ‘வருகிற 15-ம் தேதி புளோரிடாவில் உள்ள மார்-ஏ-லகோ பண்ணை வீட்டில் வைத்து மிகப்பெரிய அறிவிப்பு ஒன்றை வெளியிடப் போகிறேன்’ என்றார். 2024ம் ஆண்டு நடக்கும் அதிபர் தேர்தலில் மீண்டும் போட்டியிட உள்ளதாக டிரம்ப் அறிவிப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அல்லது டுவிட்டர் நிறுவனத்தை எலான் மஸ்க் வாங்கியுள்ள நிலையில் அதில் மீண்டும் இணைவது தொடர்பாக அறிவிப்பு வெளியிடுவார் என்றும் கூறப்படுகிறது.