September 18, 2024

அதிமுக கூட்டணியில் விரிசல் வெளியேறுகிறார் விஜயகாந்த்!

கடந்த நாடாளுமன்ற தேர்தலில் எதிர்பார்த்த அளவு இட ஒதுக்கீடு செய்யவில்லையென்றும் மேல்சபை இடம் ஒதுக்கி (எம்.பி) தரவில்லையென்றும் அதிமுக கூட்டணியில் உள்ள தேமுதிக கேப்டன் விஜயகாந்த் கடும் அதிருப்தியில் இருந்து வந்தார். இந்த நிலையில் ஆகஸ்ட் 25 ஆம் தேதி தமது பிறந்தநாள் விழாவினை சாலிக்கிராமத்தில் உள்ள தனது இல்லத்தில் கொண்டாடிய விஜயகாந்த் தனது மனைவி பிரேமலதா விஜயகாந்த் மூலம் தனது கருத்தினை வெளிப்படுத்தியுள்ளார். அதன்படி தனித்து போட்டியிட வேண்டுமென்பது தங்கள் கட்சியினர் விருப்பம் என்று அறிவித்தார் பிரேமலதா. இந்த அறிவிப்பை சற்றும் எதிர்பாராத அதிமுக அதிர்ச்சி அடைந்துள்ளது. வரும் சட்டமன்ற தேர்தலில் தங்கள் கூட்டணியில் இருந்து வெளியேறி திமுக கூட்டணிக்கோ அல்லது வேறு அணிக்கோ விஜயகாந்த் சென்றுவிட்டால் அதிமுகவின் வாக்கு வங்கியில் சரிவு ஏற்படும் என்ற கவலையும் ஆளுங்கட்சி ஆன முதல்வர் எடப்பாடிக்கு தகவல் சொல்லப்பட்டுள்ளது.

உடனடியாக அதிமுக தரப்பில் இருந்து விஜயகாந்த் தரப்பினருக்கு ரகசிய தூது அனுப்பப்பட்டு அமைதிகாக்கும் படி கூறினார்களாம். எப்படியிருந்தாலும் விஜயகாந்த் அதிமுக அணியினர் மீது கடும் அதிருப்தியில் இருக்கிறார்.