December 6, 2024

அதிமுகவை கைப்பற்ற தீவிரம் காட்டும் சசிகலா..! மத்திய அரசின் ஆதரவுக்கு காத்திருக்கிறார்…!

அதிமுகவை கைப்பற்றியே தீரவேண்டும் என்று உறுதிமொழி எடுத்துக் கொண்ட சசிகலா இதற்காக பிரதமர் மோடி, அமித்ஷா அவர்களின் ஆதரவை எதிர்பார்த்து காத்திருந்தார். அவர்கள் தரப்பில் இருந்து எந்தவித சமக்கையும் இதுவரை கிடைக்காத நிலையில் நேரடியாக களத்தில் இறங்கி பொதுமக்களையும் அதிமுக தொண்டர்களையும் உற்சாகப்படுத்தும் அளவில் தனது சுற்றுப்பயண திட்டத்தை வகுத்துக் கொண்டு தான் சார்ந்த மக்கள் அதிகம் வசிக்கும் பகுதியில் இருந்து தனது பயணத்தை தொடங்கி பல இடங்களில் சாலை மார்க்கமாக பயணம் செய்து வருகிறார். திருச்செந்தூரில் தொடங்கி மதுரை வரை தனது முதற்கட்ட பயணத்தை முடித்துக் கொண்டு இரண்டாம் கட்டமாக தஞ்சை மாவட்டத்தில் தொடங்கி கிழக்கு தமிழகம் பகுதிகளில் தனது ஆதரவாளர்களை சந்திப்பத்துடன் ஆங்காங்கே அதிமுக பிரமுகர்களும், சந்திப்பதற்கான ஏற்பாட்டை செய்யவேண்டும் என்று உத்தரவிட்டிருக்கிறாராம். சசிகலாவை சந்தித்த ஒ.பன்னீர்செல்வத்தின் சகோதரர் கட்சியில் இருந்து நீக்கப்பட்ட பிறகு சசிகலாவை சந்திக்க பலரும் அஞ்சுகிறார்களாம் இருந்தாலும் அதிமுகவை கைப்பற்றுகின்ற முயற்சியில் தொடர்ந்து ஈடுபடப் போவதாக சசிகலா தனது பயண திட்டத்தை திட்டமிட்டுள்ளாராம்.

– டெல்லிகுருஜி