April 25, 2024

அகில இந்திய காங்கிரஸ் கட்சிக்கு புதிய தலைவர்

அகில இந்திய காங்கிரஸ் செயல்பாடுகள் மற்றும் நடவடிக்கைகள் காங்கிரஸ் தொண்டர்கள் மத்தியிலும் பல்வேறு மாநில நிர்வாகிகள் மத்தியிலும் பெரும் கவலையே தோற்றுவித்துள்ளது. பிரதமர் மோடியை பாஜக கட்சியில் எதிர்கொள்வதற்கு சிறந்த தலைமை வேண்டுமென்ற குரல் அகில இந்திய அளவில் எழுந்துள்ளது. இதன் வெளிப்பாடாக 23 உயர்மட்ட தலைவர்கள் தங்கள் கடிதம் மூலம் கட்சியின் தலைமைக்கு அதிருப்தியை வெளிப்படுத்தி உள்ளார்கள். தற்காலிக தலைவராக பொறுப்பு வகிக்கும் சோனியாகாந்தி அவர்கள் தனது பதவியை ராஜினாமா செய்து புதிய தலைவரை தேர்வு செய்யுமாறு காரிய கமிட்டி உறுப்பினர்களுக்கு உத்தரவு விட்டுள்ளார். அதன்படி இன்று டெல்லியில் காங்கிரஸ் கமிட்டி கூட்டம் நடைபெற்றது. இதில் பல்வேறு தலைவர்கள் பங்கேற்று தங்கள் கருத்துக்களை வெளிப்படுத்தி உள்ளார்கள். பெரும்பான்மையான தலைவர்கள் நேரு குடும்பம் அல்லாத ஒருவரை அகில இந்திய கட்சி தலைவராக தேர்வு செய்யவேண்டும் என்று தங்கள் கருத்தை தெரிவித்தார்கள்.

அதனை ஏற்றுக்கொண்ட சோனியாகாந்தி, ராகுல்காந்தி மற்றும் ப்ரியங்காகாந்தி மூவரும் அனைவரும் விரும்புகின்ற ஒரு தலைவரை நீங்களே தேர்வு செய்யுங்கள் என்று கூறிவிட்டார்கள். கட்சியில் தற்போதுள்ள சில இளம் தலமுறையினர் நேரு குடும்பத்தை சேர்ந்த ராகுல்காந்தி அல்லது ப்ரியங்காகாந்தி இருவர் அகில இந்திய கட்சி தலைவர் பதவியை ஏற்று காங்கிரஸை வழிநடத்த வேண்டும் என்று தங்கள் விருப்பத்தினை வெளிப்படுத்துகிறார்கள். இப்படிப்பட்ட சூழ்நிலையில் முதுப்பெரும் தலைவர்கள் மாற்றி யோசிக்கிறார்கள். ஆகவே புதிய தலைவரை முடிவு செய்வதில் குழப்பம் நீடிக்கிறது. இதனால் மீண்டும் இடைக்கால தலைவராகவே காங்கிரஸ் கட்சியை வழிநடத்துவதற்கு ஒருமித்த கருத்தோடு கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டதாக சோனியாகாந்தி அவர்களையே நீடிக்க வைப்பதற்கு முடிவு செய்யப்பட்டிருக்கிறது. இந்த முடிவு காங்கிரஸ் கட்சி எல்லோரும் எதிர்பார்த்த முடிவு தான் என்றாலும் எதிர்காலத்தில் காங்கிரஸ் ஆட்சியை கைப்பற்றுவதற்கு போதுமான வலிமையை இந்த முடிவு உருவாக்காது. மேலும் சோர்வுற்ற நிலையிலேயே அகில இந்திய காங்கிரஸ் கட்சி செயல்பாடுகள் இருக்கும். இதனால் தற்பொழுது ஆட்சியில் உள்ள காங்கிரஸ் ஆளும் மாநிலங்களில் ஆட்சியை இழப்பதற்கு இந்த முடிவு வழிவகுக்கும்.